மனைவியைப் பயன்படுத்தி தூத்துக்குடி ரவுடி நூதன கொள்ளை

Read Time:3 Minute, 25 Second

தூத்துக்குடியில் பொது கழிப்பிட சுவர்களில் மனைவியின் பெயர் மற்றும் செல்போன் நம்பரை எழுதி வைத்து, அந்த எண்ணுக்குப் போன் செய்தவர்களை ரகசியமாக வரவழைத்து பணம் பறித்த ரவுடியைப் போலீஸார் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி தாமிர ஆலையில் பெயிண்டிக் கான்ட்ராக்ட் என்ஜீனியராக வேலை பார்த்து வருபவர் பத்ரா. ஒரிசா வாலிபரான இவரிடம் லலிதா என்ற பெண் செல்போனில் ஆசைவார்த்தை கூறி அவரை வரவழைதது கணவர் உதவியுடன் பணம் மற்றும் செல்போன் பறித்ததாக பத்ரா போலீஸில் புகார் கொடுத்தார். இதைத் தொடர்ந்து தென்பாகம் இன்ஸ்பெக்டர் ரகுநாதன், சப்-இன்ஸ்பெக்டர் வெள்ளபாண்டி, ஆகியோர் தீவிர விசாரணை நடத்தி லலிதாவின் கணவர் கந்தன்காலனியை சேர்ந்த முகமது பஷீர் என்பவரை கடந்த 2 நாட்களுக்கு முன் கைது செய்தனர். இவர் மீது ஏற்கனவே தென்பாகம் காவல்நிலையத்தில் 3 வழக்கும், மத்திய பாகம் காவல்நிலையத்தில் ஒரு வழக்கும் உள்ளது. போலீஸ் விசாரணையில் முகமது பஷீர் நூதன முறையில் பணம் பறித்தது தெரிய வந்துள்ளது. தூத்துக்குடியில் உள்ள பொது கழிப்பிட சுவர்களில் லலிதாவின் பெயரையும், அதன்கீழ் அவரது செல் நம்பரையும் முகமது பஷீர் எழுதி வைத்து விடுவாராம்.

பாத்ரூம் செல்பவர்களில் சில சபலக்காரர்கள் அந்த எண்ணில் தொடர்பு கொள்வார்கள். எதிர்முனையில் பேசும் லலிதா அவர்களிடம் காதல் ரசம் சொட்ட, சொட்ட பேசி தன் வலையில் வீழ்த்தி விடுவார். அந்த நபரை குறிப்பிட்ட ஒரு இடத்திற்கு வரவழைப்பார்

ஆசையுடன் அங்கு வருவோரிடம் பஷீரும், லலிதாவும் சேர்ந்து மிரட்டி பணம், நகைகளைப் பறித்து விட்டு விரட்டி விடுவார்கள்.

இதனை வெளியே சொன்னால் அவமானம் எனக் கருதி யாரும் போலீசில் புகார் செய்வதில்லை. இதனை அந்த கும்பல் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டு பல வாலிபர்களிடம் பணம் கறந்துள்ளனர்.

என்ஜினியர் பாத்ராவிடம் பணம் பறித்ததோடு அவரை கத்தியால் குத்தியதால் தான் இந்த சம்பவம் வெளியே தெரிய வந்துள்ளது. இதையடுத்து முகமது பஷீர் முதலில் கைது செய்யப்பட்டார்.

இதைத் தொடர்ந்து அவரது மனைவி லலிதா, முகமது பஷீர் தம்பி முகமது இஸ்மாயில் ஆகியோரையும் தென்பாகம் போலீசார் கைது செய்தனர். 3 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post மனித மொழி பேசிய சிம்பான்சி மரணம்
Next post ஓடும் விமானத்தில் இந்திய தொழிலாளர் மரணம்