இன்றைய போட்டிக்கு விஷேட பாதுகாப்பு!!

Read Time:1 Minute, 29 Second

65871234Securityகொழும்பு ஆர் பிரேமதாஸ மைதானத்தில் இன்று நடைபெற இருக்கும் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான 20க்கு20 கிரிக்கட் போட்டியை முன்னிட்டு விஷேட பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

எந்தவித தடைகளும் இடம்பெறாத வகையில் இன்றைய போட்டியை நடத்துவதற்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

இன்றைய போட்டியை பார்வையிட வரும் அனைவரினது பயணப் பொதிகளும் சோதனைக்கு உட்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

அத்துடன் மைதானத்தினுள் குடிபோதையில் குந்தகம் விளைவிப்போர் கைது செய்யப்படுவர் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான இறுதிப் போட்டி இன்று இரவு 7 மணிக்கு கொழும்பு ஆர் பிரேமதாஸ மைதானத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நல்லாட்சி குறித்து கேள்வியெழுப்புகிறார் திலங்க சுமதிபால!!
Next post கொழும்பு உட்பட சில பிரதேசங்களில் நீர் விநியோகம் துண்டிப்பு!!