வங்காளதேசத்தில் பஸ் மீது ரெயில் மோதியதில் 33 பேர் பலி

Read Time:1 Minute, 12 Second

Bangladesh-Map.jpgவங்காளதேசத்தில் பஸ் மீது ரெயில் மோதியதில் 33 பேர் பலியானார்கள். 40 பேர் காயம் அடைந்தனர். இந்தச்சம்பவம் ஜாய்புர்கட் மாவட்டத்தில் அக்கேல்பூர் என்ற இடத்தில் நடந்தது. ஆள் இல்லாத ரெயில்வே கிராசிங்கில் தண்டவாளத்தை கடக்க முயன்ற பஸ்மீது, குல்னா என்ற இடத்துக்கு செல்லும் `ரூப்ஷா’ எக்ஸ்பிரஸ் ரெயில் மோதியது. இதில், சில கிலோமீட்டர் தூரத்துக்கு இழுத்துச் செல்லப்பட்டது. பஸ்சில் இருந்த பயணிகளில் 20 பேர் அந்த இடத்திலேயே இறந்தனர்.

53 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் மேலும் 13 பேர் பலியானார்கள். இதனால் சாவு எண்ணிக்கை 33 ஆக உயர்ந்தது. பஸ்சுக்குள் சிக்கிக்கிடக்கும் பயணிகளை மீட்கும் பணியில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post மும்பையில் 7 ரெயில் நிலையங்களில் தொடர் குண்டு வெடிப்பு: 100-க்கும் மேற்பட்டோர் பலி
Next post சூரிச் மாநகரில் புளொட்டின் வீரமக்கள் தினம் அனுஷ்டிப்பு