நீதிபதி மீது தாக்குதல்: கைதான வக்கீல் சிறையில் அடைப்பு- இன்னொரு வக்கீலுக்கு வலைவீச்சு

Read Time:3 Minute, 34 Second

எழும்பூர் 5-வது கோர்ட்டு மாஜிஸ்திரேட்டாக இருப்பவர் முருகானந்தம். இவர் கோர்ட்டில் தனது இருக்கையில் அமர்ந்த படி வழக்கு விசாரணைகளை நடத்திக் கொண்டிருந்தார். அப்போது வக்கீல்கள் 2 பேர் திருட்டு வழக்கில் கைதான 4 பெண்களை ஜாமீனில் விடுவிக்கக்கோரி மனுதாக்கல் செய்தனர். இம் மனுவை மாஜிஸ்திரேட்டு முருகானந்தம் தள்ளுபடி செய்தார். இதையடுத்து 2 வக்கீல் களும் மாஜிஸ்திரேட்டிடம் தகராறில் ஈடுபட்டனர். பின்னர் மாஜிஸ்திரேட்டு முருகானந்தம் எழுந்து தனது அறைக்கு சென்றார். இவரது அறைக்குள் சுமார் 20 வக்கீல் கள் அத்துமீறி நுழைந்து மாஜிஸ்திரேட்டு முருகானந் தத்தை சரமாரியாக தாக்கினர். இதில் அவருக்கு முகத்தில் ரத்தக்காயம் ஏற்பட்டது. இது தொடர்பாக எழும்பூர் போலீசில் மாஜிஸ்திரேட்டு புகார் செய்தார். இதன் பேரில் வக்கீல்கள் தங்கதுரை, இளங்கோ மற்றும் 20 வக்கீல் கள் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதேபோல மாஜிஸ்திரேட் டின் உதவியாளர் பாலகிருஷ் ணன், போலீஸ்காரர் ராஜன் ஆகியோர் கொடுத்த புகாரின் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். மொத்தம் 3 வழக்குகள் போடப்பட்டது.இதையடுத்து வக்கீல்களை பிடிப்பதற்காக தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.

பின்னர் சைதாப்பேட்டை கோர்ட்டு அருகில் வைத்து வக்கீல் தங்க துரையை போலீசார் கைது செய்தனர். பின்னர் இரவோடு இரவாக திருவான்மிïரில் உள்ள எழும்பூர் 6-வது கோர்ட்டு மாஜிஸ்திரேட்டு தர்மாவின் வீட்டில் அவரது முன்னிலையில் வக்கீல் தங்கதுரை ஆஜர்படுத்தப்பட் டார். இவரை 15 நாள் காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு உத்தர விட்டார். இதையடுத்து வக்கீல் தங்கதுரை புழல் சிறையில் அடைக்கப் பட்டார்.

தலைமறைவான இன்னொரு வக்கீல் இளங்கோவை போலீசார் தேடிவருகிறார்கள்.

மேலும் மாஜிஸ்திரேட்டு முருகானந்தம் கொடுத்த புகாரில் வக்கீல்கள் தங்கதுரை, இளங்கோ மற்றும் 20 வக்கீல் கள் சேர்ந்து தன்னை தாக்கிய தாக புகார் செய்திருந்தார். இதில் இவர்கள் 2 பேர் தவிர மற்ற 20 வக்கீல்களும் யார் என்று தெரியவில்லை.அவர்களை கண்டுபிடிப் பதற்கான முயற்சியிலும் போலீசார் இறங்கியுள்ளனர்.

எனவே மாஜிஸ்திரேட்டு தாக்கப்பட்ட சம்பவம் தொடர் பாக மேலும் பல வக்கீல்கள் கைது செய்யப்படலாம் என்று தெரிகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ஆசிரியை கண்ணில் மண்ணை தூவி நகை பறிப்பு
Next post போதை மருந்து புகார்: டென்னிஸ் வீராங்கனை ஹிங்கிஸ் திடீர் ஓய்வு