மும்பையில் 7 ரெயில் நிலையங்களில் தொடர் குண்டு வெடிப்பு: 100-க்கும் மேற்பட்டோர் பலி

Read Time:1 Minute, 59 Second

mumpai.jpgநெஞ்சை பிளக்கும் இந்த சம்பவம் மாலை 6 மணியில் இருந்து 6.30 மணிக்குள் நடந்தது. முதலாவதாக கால் ரெயில் நிலையத்திலும், அதனைத் தொடரந்து மாகின், மாதுங்கா, ஜோகேஸ்வரி, பூரிவில்லா, பாயண்டர், ராக் மும்பை ரயில் நிலையங்களிலும் குண்டு வெடித்தது. இதில் 100-க்கும் மேற்பட்டோர் பலியானதாக முதலில் வந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் நூற்றுக்கணக்கானோர் காயம் அடைந்துள்ளனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து கிழக்கு ரயில்வேயின் அனைத்து ரயில்களும் நிறுத்தபட்டன. மும்பையில் செல்போன் இணைப்புகளும் துண்டிக்கப்பட்டன.மேலும் தகவல்கள் பெற ஹெல்ப்லைன் 22005388 என்ற எண்ணுக்கும் , விசாரணைக்கு 131, 3061763 என்ற எண்ணுக்கும் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கபட்டுள்ளது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து டெல்லி, பெங்களுர், சென்னை உள்பட இந்தியா முழுவதும் அனைத்து ரயில் நிலையங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தபட்டுள்ளது. முக்கிய நகரங்களில் போலீசார் ரோந்து வருகின்றனர். விமான நிலையங்களிலும் போலீசார் குவிக்கபட்டுள்ளனர்.

இன்று பகலில் காஷ்மீரில் நடந்த குண்டு வெடிப்பில் 12 பேர் உயிர் இழந்தனர். மாலையில் மும்பையில் குண்டு வெடித்தது. இந்த சம்பவங்கள் குறித்து ஆலோசிக்க மத்திய மந்திரி சபையின் அவசர கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post யாழ்- புலிகளால் அப்பாவிக் குடும்பஸ்தர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
Next post வங்காளதேசத்தில் பஸ் மீது ரெயில் மோதியதில் 33 பேர் பலி