இந்தியாவில் நடைபெறும் தற்கொலைகளுக்கு இரண்டாவது காரணம் உடல்நலக்குறைவு: ஆய்வில் தகவல்!!

Read Time:2 Minute, 30 Second

e6cbc33d-8982-4a6f-a336-bf729dcfb5f1_S_secvpfஇந்தியாவில் நடைபெறும் தற்கொலைகளுக்கு மிகப்பெரிய இரண்டாவது காரணம் உடல்நலக்குறைவு என்பது தற்போது நடைபெற்ற ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

மக்கள் தொகையில் உலகின் இரண்டாவது பெரிய நாடான இந்தியாவில் கடந்த (2014) ஆண்டு நிலவரப்படி ஒவ்வொரு மணிநேரமும் 15 பேர் தற்கொலை செய்து கொள்வதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

இவர்களில் 69.7 சதவீதம் பேர் ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கும் குறைவான வருமானம் ஈட்டிய குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்றும், கடந்த ஆண்டில் தற்கொலை என்னும் விபரீத முடிவை தேர்ந்தெடுத்த ஆறில் ஒரு பகுதியினர் இல்லத்தரசிகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பத்து லட்சத்துக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட முக்கிய பெருநகரங்களைப் பொருத்தமட்டில் தமிழகத்தின் தலைநகரான சென்னை தற்கொலையில் முதலிடத்தில் உள்ளது. இங்கு கடந்த ஆண்டில் மட்டும் 2 ஆயிரத்து 214 பேர் தற்கொலைக்கு பலியாகியுள்ளனர். ஆயிரத்து 906 தற்கொலை மரணங்களை கண்ட பெங்களூர் இரண்டாமிடத்திலும், டெல்லி (1,847) மூன்றாமிடத்திலும் உள்ளதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் தற்கொலை குறித்து தேசிய குற்ற ஆவணக் காப்பகம் மற்றொரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் இந்தியாவில் நடைபெறும் தற்கொலைகளுக்கு மிகப்பெரிய இரண்டாவது காரணம் உடல்நலக்குறைவு
என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையின்படி கடந்த 2014 ஆம் ஆண்டு தற்கொலை செய்தவர்களின் மொத்த எண்ணிக்கையில் 18 சதவிகிதம் பேர் உடல் நலக்குறைவால் தற்கொலை முடிவை எடுத்ததாக கூறப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அரியானாவில் பரிதாபம்: மனைவி, மகள், மகனை சுட்டுக்கொன்று விவசாயி தற்கொலை!!
Next post உடுப்பி அருகே இரவு நேரத்தில் தென்னை மரத்தில் குழந்தையின் சிரிப்பொலி கேட்டதால் பேய் பீதி!!