தபால் மூலம் வாக்களிக்க 566,823 பேர் தகுதி!!

Read Time:1 Minute, 52 Second

1863311699Postelஇந்த முறை பொதுத் தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்கு 566,823 பேர் தகுதி பெற்றுள்ளனர்.

நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்காக 628,925 பேர் விண்ணப்பித்திருந்ததாக பிரதி தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம். மொஹமட் தெரிவித்தார்.

அதில் 62,102 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை தபால் மூலம் வாக்களிப்பதற்கான வாக்குச்சீட்டுக்கள் நாளைய தினம் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகங்களிலிருந்த தபால் நிலையங்களுக்கு விநியோகிக்கப்படவுள்ளன.

அந்த வகையில் அனைத்து தெரிவத்தாட்சி அலுவலகங்களிலும் தற்காலிக தபால் நிலையங்களை அமைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொண்டிருப்பதாக எம்.எம். மொஹமட் தெரிவித்தார்.

இந்த முறை இரண்டு கட்டங்களாக தபால் மூல வாக்குப்பதிவுகள் இடம்பெறவுள்ளன.

ஆகஸ்ட் மாதம் 03ம் திகதி பொலிஸ் திணைக்களத்தின் அதிகாரிகளுக்கும், அரச பாடசாலைகளின் ஆசிரியர்களுக்கும் தபால் மூலம் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதுதவிர ஆகஸ்ட் மாதம் 05 மற்றும் 06ம் திகதிகளில் தபால் மூலம் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள மற்றைய வாக்களர்கள் வாக்களிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 1425 லட்சம் நட்டம்: ஐமசுமு செயலாளர் மீது வழக்கு தொடர அமைச்சரவை அனுமதி!!
Next post சவூதியில் இடம்பெற்ற விபத்தில் இலங்கை வாலிபர் பலி!