வயிற்று பிழைப்புக்கு ஆட்டோ: செவிக்குணவாய் கிட்டார் இசை- ஆட்டோ ஓட்டுனரின் இரட்டை முக வீடியோ!!

Read Time:2 Minute, 42 Second

273ea80c-db06-4a83-bcbf-513bf303b6b6_S_secvpfமும்பை வாலிபர் ஒருவர் கிட்டார் வகுப்புக்கு சென்று திரும்பும்போது, ஆட்டோவை பிடித்து வீட்டுக்கு கிளம்பினார். கையில் கிட்டாருடன் ஆட்டோவில் ஏறியவரிடம், ஓட்டுனர் கிட்டார்களைப் பற்றி நிறைய பேசிக்கொண்டே வந்தார்.

அந்த ஆட்டோ ஓட்டுனருக்கு கிட்டாரின் மீது இருந்த ஆர்வத்தைப் பார்த்து வாலிபர் மெய்சிலிர்த்துப் போனார். இதையடுத்து, ஆட்டோ ஓட்டுனர் தானும் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு நண்பர்களுடன் இணைந்து பார்களில் குழுவாக கிட்டார் வாசித்து வந்ததை நினைவு கூர்ந்தார். மாலை வேளைகளில் நண்பர்களுடன் கூடி அந்த காலத்தின் பிரபல இந்தி படங்களின் பாடல்களை வாசித்து மகிழ்ந்த தனது மலரும் நினைவுகளை அந்த வாலிபருடன் அவர் பகிர்ந்து கொண்டார்.

தொழில்ரீதியாக கிட்டார் வாசிக்க பெரிதாக வாய்ப்புகள் கிடைக்காததால் நண்பர்களில் சிலர் வேறு வேலைகளுக்கு சென்றுவிட்ட நிலையில், ஆட்டோ ஓட்டுவதை தொழிலாக ஏற்றுக்கொண்ட தன்னால் தொடர்ந்து கிட்டார் வாசிப்பதில் அதிக ஆர்வம் காட்ட முடியவில்லை. அதனால், வாசிப்பையே முழுமையாக நிறுத்திவிட்டதாக கூறினார்.

இதைக்கேட்டு மகிழ்ச்சியடைந்த வாலிபர், தன்னிடமிருந்த கிட்டாரை அவரிடம் கொடுத்து, அவரது விருப்பமான பாடலை வாசிக்கச் சொல்லி கேட்டார். வெகு நாட்களுக்கு பிறகு அவர் கையில் கிட்டார் கிடைத்ததும் முப்பது ஆண்டுகளுக்கு முன் திரைக்கு வந்து எல்லோரையும் மயக்கிய ‘ஷோலே’ திரைப்படத்தின் தீம்மியூசிக்கை அவர் வாசித்து காட்டினார்.

‘கிட்டார் கற்பதை விட்டுவிடாதே! அது ஒருநாளும் உன்னை கைவிடாது!’ என்றும் அந்த வாலிபருக்கு ஆட்டோ ஓட்டுனர் அறிவுறுத்தினார்.

அந்த வீடியோ தொகுப்பைக் கண்டுகளியுங்கள்!

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சஜின்வாஸுக்கு சுவாசக் கோளாறு: ஆனாலும் பிணை இல்லை!!
Next post கரமனை ஆற்றில் பிணமாக மிதந்த மலையாள நடிகை: சாவில் மர்மம் இருப்பதாக பெற்றோர் புகார்!!