ஏற்காட்டில் பள்ளி மாணவி தற்கொலை முயற்சி: தோழிகள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்!!

Read Time:4 Minute, 44 Second

6a4d3faa-cca1-484a-be68-137e22cadb27_S_secvpfசேலம் மாவட்டம் ஏற்காடு தாலுகா பட்டிப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தன். இவர் தோட்ட வேலை செய்து வருகிறார். இவரது மகள் ஷாலினி (வயது 16). இவர் ஏற்காடு அரசு மேல்நிலைப்பள்ளியில் 11–ம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்த நிலையில் இன்று காலை பள்ளிக்கு செல்வதற்கு முன்பு மாணவி ஷாலினி வீட்டில் இருந்து பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்து குடித்து விட்டார்.

பின்னர் அவர் பள்ளிக்கு புறப்பட்டார். அப்போது அவர் தடுமாறிய படி சக தோழிகளுடன் பள்ளிக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். எனினும் அவரால் மேலும் நடக்க முடியவில்லை.

விஷம் அவரது உடல் முழுவதும் பரவியதால் திடீரென வாயில் நுரை தள்ளியபடி மாணவி ஷாலினி மயங்கி கீழே விழுந்தார்.

இதனை கண்டதும் அவரது தோழிகள் அதிர்ச்சி அடைந்தனர். ஷாலினியிடம் என்ன ஆனது என்று அவரது தோழிகள் கேட்டுள்ளனர். தான் விஷத்தை குடித்து விட்டதாக ஷாலினி கூறினார். இதனைக் கேட்டதும் அவரது சக தோழிகள் கதறி அழுதனர்.

உடனே அவர்கள் 108 ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு தகவல் கொடுத்தனர். உடனே சம்பவ இடத்திற்கு 108 ஆம்புலனஸ் வாகனம் விரைந்து வந்தது. அதில் மாணவி ஷாலினியை ஏற்றி சிகிச்சைக்காக ஏற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

காலை 7.45 மணியளவில் மருத்துவமனையில் மாணவி ஷாலினி அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் டாக்டர் இல்லாததால் அங்கு பணியில் இருந்த நர்சுகள் மாணவிக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். ஆனால் மாணவியின் நிலைமை கவலைக்கிடமானது.

எனவே மாணவிக்கு உயர் சிகிச்சை அளிக்க வேண்டுமானால் டாக்டர் மருத்துவமனைக்கு வந்த பின், அவரது பரிந்துரையின் பேரில்தான் சிகிச்சை அளிக்க முடியும் என்று அங்கு பணியில் இருந்த நர்சுகள் தெரிவித்து விட்டனர்.

இதையடுத்து மாணவி ஷாலினி சிகிச்சைக்காக காலை 8.40 மணி வரை மருத்துவமனையில் காத்திருந்தார். அதன் பிறகு மருத்துவமனைக்கு வந்தார். மாணவி ஷாலினியின் நிலைமையை பார்த்ததும், மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் அனுப்பி வைக்க பரிந்துரை செய்தார்.

இதை தொடர்ந்து சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக மாணவி சேர்க்கப்பட்டார். அங்கு அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இச்சம்பவம் குறித்து மாணவியின் பெற்றோர் கூறுகையில், டாக்டர் வந்த பின்னரே தகுந்த சிகிச்சை அளிக்கப்படும் என்று கூறியதால் மகள் ஷாலினி மருத்துவமனையில் சுமார் 1 மணி நேரம் காத்திருந்தாள். 1 மணி நேரம் கழித்து டாக்டர் மருத்துவமனைக்கு வந்தார். அவர் சரியான நேரத்தில் வந்திருந்தால் எங்களது மகளுக்கு சரியான சிகிச்சை உடனடியாக அளித்திருக்கலாம்.

மகளின் நிலைமை குறித்து டாக்டரிடம் கேட்டதற்கு அவர் எந்த பதிலும் கூறவில்லை. எந்த பதிலும் கூறாமல் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுமதிக்க பரிந்துரை செய்தார்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மாணவி எதற்காக விஷம் குடித்தார்? என்பது குறித்து உடனடியாக தெரியவில்லை. இதுகுறித்து ஏற்காடு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பீகாரில் ஆயுதங்கள் கடத்திய கும்பல் கைது!!
Next post கோழி வறுவலை விரும்பி உண்பவரா நீங்கள்..? ஆபத்து..!!