டெல்லியில் 15 சிறுமிகளை கற்பழித்து கொன்ற கொடூரன்: பிணங்களை கால்வாயில் வீசியதாக வாக்குமூலம்!!
டெல்லியை அடுத்த புறநகர் பகுதியான நொய்டாவில் தொழில் அதிபர் வீட்டு வேலைக்காரன் சுரீந்தர் கோலி என்பவன் கடந்த 2005 முதல் 2006–ம் ஆண்டு வரை பல சிறுமிகளையும், இளம் பெண்களையும் கடத்தி கற்பழித்து கொலை செய்தான். நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் கொலையாளி சுரீந்தர் கோலிக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் அது ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.
சுரீந்தர் கோலி போல டெல்லியில் பல கொலைகள் செய்த ஒரு காமக்கொடூரன் சிக்கியுள்ளான். அவனது பெயர் ரவீந்தர்குமார் (24). வடமேற்கு டெல்லியில் பேகம்பூர் என்ற இடத்தில் கடந்த 14–ந்தேதி 6 வயது சிறுமி கற்பழித்து கொலை செய்யப்பட்டாள். இந்த சம்பவம் தொடர்பாக ரவீந்தர் குமார் கைது செய்யப்பட்டான்.
அவனிடம் போலீசார் விசாரணை நடத்திய போது டெல்லியில் 15 சிறுவர்–சிறுமிகளை கடத்திச் சென்று கற்பழித்து கொலை செய்ததாக திடுக்கிடும் தகவலை தெரிவித்தான். அவன் கற்பழித்து கொன்ற விதத்தை கேட்டு போலீசாரே அதிர்ச்சி அடைந்தனர்.
கடந்த 2009–ம் ஆண்டு முதல் அவன் இந்த தொடர் கொலைகள் செய்துள்ளான். தான் விரும்பும் சிறுவர்– சிறுமிகளுக்கு சாக்லேட் மற்றும் பணம் கொடுத்து ஆசை வார்த்தை கூறுவான். பின்னர் ஏமாற்றி ஆள் நடமாட்டம் இல்லாத ஒதுக்குப்புறமான இடத்துக்கு கடத்திச் செல்வான். அங்கு அவர்களை கற்பழித்து விட்டு அடித்து கொலை செய்து விடுவான்.
தான் கற்பழித்ததை காட்டி கொடுத்து விடுவார்கள் என்பதால் அனைவரையும் கொன்று விடுவதாகவும், பிணங்களை சாக்கடை கால்வாய்களிலும், வயல் வெளிகளிலும் வீசி விடுவேன் என்றும் தெரிவித்தான்.
தனது காமப்பசிக்கு இரையானவர்களின் விவரங்களையும், அவர்களின் இருப்பிடங்களையும் போலீசாரிடம் பட்டியலிட்டு தெரிவித்துள்ளான். இதையடுத்து போலீசார் அவன் தெரிவித்த இடங்களுக்கு சென்று விசாரித்து வருகிறார்கள். இதில் 6 பேரை அவன் கற்பழித்து கொன்றது உறுதிப் படுத்தப்பட்டுள்ளது.
பேகம்பூரில் 2 சிறுமிகளையும், கன்ஞ்வாலா, சமாய்பூர் பாட்லி, முண்டகா, விஜய் விவகார் ஆகிய இடங்களில் தலா ஒரு சிறுமியை கற்பழித்து கொன்றது உறுதிப்படுத்தப்பட்டது. சிறுமிகள் தவிர சிறுவர்களையும் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்துள்ளான். மற்ற கொலைகள் பற்றியும் போலீசார் தகவல் சேகரித்து விசாரித்து வருகிறார்கள்.
இதுதவிர டெல்லியில் மாயமான சிறுவர்–சிறுமிகளின் பட்டியலை போலீசார் சேகரித்து உள்ளனர். இந்த பட்டியலுடன் கொலையாளி சொன்ன பெயர் விவரங்களை ஒப்பிட்டு விசாரணை நடக்கிறது.
பேகம்பூரில் 6 வயது சிறுமி காணாமல் போனதும் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் அந்த பகுதி முழுவதும் தேடினார்கள். அப்போது சிறுமியின் வீட்டில் இருந்து 50 மீட்டர் தொலைவில் உள்ள கட்டுமான பணி நடந்து வரும் 3 மாடி கட்டிடத்தில் சிறுமியின் பிணம் மீட்கப்பட்டது.
சிறுமி கற்பழிக்கப்பட்டதும் தெரியவந்தது. அந்த இடத்தில் டிரைவிங் லைசன்ஸ் சிக்கியது. இதை வைத்து போலீசார் துப்பு துலக்கி கொலையாளி ரவீந்தர்குமாரை கைது செய்தனர்.
இவன் கடந்த ஆண்டு ஒரு சிறுவன் கடத்தல் வழக்கில் கைதாகி ஜாமீனில் விடுதலையானான்.
இதற்கிடையே டெல்லியில் குற்றங்கள் பெருகி வருவதற்கு மத்திய பா.ஜனதா அரசே காரணம் என்றும், தலைநகரில் சட்டம்–ஒழுங்கை நிலை நாட்ட மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே சட்டம்– ஒழுங்கு நிலை நாட்டப்பட வேண்டுமானால் போலீஸ் நிர்வாகம் மாநில அரசுவசம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்றார்.
Average Rating