தோட்ட நிர்வாகத்தின் கெடுபிடியை எதிர்த்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்!!

Read Time:1 Minute, 24 Second

777826270teaஅக்கரப்பத்தனை பெல்மோரல் தோட்ட தொழிற்சாலைக்கு முன்பாக 1800 இற்கு மேற்பட்ட தோட்ட தொழிலாளர்கள் இன்று காலை 10 மணி முதல் 12 மணிவரை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தோட்ட நிர்வாகம் தொழிலாளர்களுக்கு மாதாந்தம் வழங்க வேண்டிய கோதுமை மா, தேயிலை தூள், சம்பள முற்பணம் மற்றும் ஏனைய சலுகைகளையும் வழங்க முடியாது என நிர்வாகம் கூறியதையடுத்து உடனடியாக இச்சலுகைகளை வழங்க வேண்டும் என தெரிவித்தே இத்தோட்ட மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டதாக தெரிவிக்கின்றனர்.

அத்தோடு 1000 ரூபா சம்பள உயர்வு கோரி தோட்ட தொழிலாளர்கள் மெதுவாக பணி செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்ட இவர்களுக்கு தோட்ட நிர்வாகம் இடையூறுகளை கொடுப்பதாகவும் இத்தோட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் ஆர்பாட்டத்தில் பெல்மோரல், பெரியநாகவத்தை, கிரன்லி ஆகிய தோட்டங்களை சேர்ந்த தொழிலாளர்கள் கலந்துகொண்டனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இம்முறை தேர்தலில் அந்த அதிஸ்டத்தை பெறுவது மட்டக்களப்பு மாவட்டம்!!!
Next post ததேகூ சோரம் போகாத சக்தி அல்ல – ஈரோஸ்!!