மகள் தொடர்ந்த பாலியல் பலாத்கார வழக்கில் தந்தை விடுதலை!!

Read Time:1 Minute, 46 Second

41592ba3-338b-480a-aa18-3d37f41c7592_S_secvpf17 வயது மகளை பலாத்காரம் செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தந்தையை விடுதலை செய்து டெல்லி கோர்ட்டு உத்தரவிட்டது.

டெல்லியைச் சேர்ந்த அந்த சிறுமி கடந்த வருடம் மார்ச் மாதம் போலீசில் ஒரு புகார் அளித்தார். அதில், வீட்டில் தனியாக இருந்தபோது தன் தந்தை தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படியும் கூறியிருந்தார்.

அதன் அடிப்படையில், குற்றம் சாட்டப்பட்டவரை போலீசார் கைது செய்து, வழக்குப்பதிந்து டெல்லி கோர்ட்டில் விசாரணை நடைபெற்று வந்தது.

இவ்வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக போதுமான ஆதாரங்கள் இல்லை எனக்கூறி அவரை விடுதலை செய்து நீதிபதி இன்று உத்தரவிட்டார்.

அதில், பாதிக்கப்பட்டதாக கூறப்படும் 17 வயது பெண்ணிடம் விசாரணை நடத்தியதில் அவருடைய வளர்ப்புத்தாய் அவரை கொடுமைப்படுத்தி வந்ததாகவும், அடிக்கடி அவரை அடித்து உதைத்ததாகவும், அதனால் வெறுப்படைந்த அவர், தனது தந்தை மீது இப்படி ஒரு பொய் வழக்கினை சுமத்தியிருந்ததும் தெரியவந்துள்ளது. இதனையடுத்தே, அவர் விடுதலை செய்யப்படுவதாக நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பலாத்காரத்திற்கு உள்ளான பெண்களுக்கு சம்பளத்துடன் கூடிய 3 மாத விடுமுறை: மத்திய அரசு அறிவிப்பு!!
Next post சிறைக்குள் கைதி மர்ம மரணம்: விஷம் வைத்து கொன்றதாக இதர கைதிகள் போராட்டம் – உ.பி.யில் பரபரப்பு!!