டளஸ் அழகப்பெருமவிற்கு மரண அச்சுறுத்தல் விடுத்தவர் பிணையில் விடுதலை!

Read Time:1 Minute, 38 Second

1217052542Dullsமுன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெறுமவிற்கு மரண அச்சுறுத்தல் விடுத்ததாக கூறப்படும் வெலிகம பிரதேச சபையின் முன்னாள் தலைவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

தனது சட்டத்தரணி சகிதம் இன்று மாத்தறை நீதவான் நீதிமன்றில் ஆஜரானபோது அவரை பிணையில் விடுவித்ததாக எமது அததெரண செய்தியாளர் குறிப்பிட்டார்.

கடந்த 13ம் திகதி வேட்புமனு தாக்கல் செய்வதற்காக சென்றிருந்தவேளை மாத்தறை பிரதேச செயலகத்தில் வைத்து வெலிகம பிரதேச சபையின் முன்னாள் தலைவர் டளஸ் அழுகப்பெறுமவிற்கு மரண அச்சுறுத்தல் விடுத்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் குறித்த நபருக்கு எதிராக, மிரட்டல் விடுத்தமை மற்றும் மரண அச்சுறுத்தல் விடுத்தமை போன்ற குற்றச்சாட்டுக்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இன்று நீதிமன்றில் ஆஜராகியிருந்த வெலிகம பிரதேச சபையின் முன்னாள் தலைவரை மாத்தறை நீதவான் யுரேஷா டி சில்வா 02 லட்சம் ரூபா சரீர பிணையில் செல்ல அனுமதித்ததாக எமது அததெரண செய்தியாளர் குறிப்பிட்டார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வேட்பாளர் மஹிந்தவின் பாதுகாப்பை குறைக்கக் கோரி உயர் நீதிமன்றில் மனு!!
Next post பெங்களூர் அருகே சிறுமியை ஈவ் டீசிங் செய்த 12 வயது சிறுவன் வெட்டிக்கொலை!!