சங்கரராமன் கொலை வழக்கு: 4 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த பார் உரிமையாளர் கைது!!

Read Time:1 Minute, 30 Second

48fd2184-455f-40da-a7f8-4191e5c11389_S_secvpfகாஞ்சிபுரத்தில் கடந்த 2004–ம் ஆண்டு சங்கரராமன் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் காஞ்சி சங்கராச்சாரியார் உள்பட பலர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள கல்லங்குடியை சேர்ந்த பாண்டி (32) என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். ஜாமீனில் வெளியே வந்த அவர் திடீரென மாயமானார்.

இவர் மீது சங்கரராமன் கொலை வழக்கு உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தெரிகிறது. எனவே இவரை போலீசார் 4 ஆண்டுகளாக தேடி வந்தனர்.

இந்த நிலையில் பாண்டி கல்லங்குடியில் வசித்து வருவது சென்னை போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் தேவகோட்டைக்கு வந்து பாண்டியை கைது செய்து அழைத்து சென்றனர்.

பாண்டிக்கு கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்புதான் திருமணம் நடந்து ஒரு குழந்தை உள்ளது. இவர் அதே பகுதியில் உள்ள டாஸ்மாக்கில் பார் எடுத்து நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிவகாசி: வேன் விபத்தில் பலியான 6 பெண்களின் குடும்பத்துக்கு நிதி உதவி வழங்க கோரிக்கை!!
Next post ஆண்டிப்பட்டி அருகே நாய்கள் கடித்து புள்ளிமான் சாவு!!