26 நிமிடத்தில் விற்று தீர்ந்த ராயல் என்பீல்டு கிளாசிக் புல்லட்கள்!!

Read Time:2 Minute, 15 Second

126a065b-0504-404c-8746-025b12d87bd6_S_secvpfகடந்த மே மாதம் ராயல் என்பீல்டு ‘கிளாசிக் 500’ பைக்கின் சிறப்பு பதிப்புகளை வெளியிட்டது. மேலும் இந்த மாடலில் மொத்தமாக 200 வண்டிகள் மட்டுமே விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தது.

சமீபத்தில் டெல்லியில் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் விற்பனை மற்றும் உதிரி பாகங்கள் கடை திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் அந்நிறுவனத்தின் பிரபலமான ‘கிளாசிக் 500’ இருசக்கர வாகனத்தின் சிறப்பு பதிப்பும் அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் இந்த மாடலில் ஒவ்வொரு நிறத்திலும் மொத்தமாக 200 வண்டிகள் மட்டுமே விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தது. இந்த கிளாசிக் 500 லிமிடெட் பதிப்புகள் ஜூலை 15-ந்தேதி முதல் விற்பனைக்கு வரும் என தெரிவித்திருந்தது. இது முழுதும் ஆன்லைன் மூலமாகவே விற்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

கிளாசிக் 500 மாடலில் எவ்வித இயந்திர மாற்றங்களையும் செய்யாமல், புதிதாக இரண்டு நிறங்களில் இந்த லிமிடெட் பதிப்பு வெளியிடப்பட்டது. அதில் ஒன்று விமான படை விமானங்களை போன்று நீல நிறத்திலும், மற்றொன்று பாலைவன புழுதி புயல் நிறத்திலும் வடிவமைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் நேற்று ஆன்லைன் மூலம் விற்பனை தொடங்கிய 26 நிமிடத்தில் அனைத்து புல்லட்களும் விற்று தீர்ந்துவிட்டதாக ராயல் என்பீல்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் மும்பை ஷோ ரூம் விலை 2.05 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post “றோவும்” இலங்கை அரசியலும்!!
Next post இந்து–முஸ்லிம் காதலுக்கு எதிர்ப்பு: தாஜ்மகாலில் கழுத்தை அறுத்த காதல் ஜோடி!!