ஓடும் ரயிலில் மோதி இருவர் பலி – இருவர் காயம்!!

Read Time:1 Minute, 56 Second

329376961Trainநாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற ரயில் விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமிருவர் காயமடைந்துள்ளனர்.

கொழும்பில் இருந்து மாத்தறை நோக்கி புறப்பட்ட புகையிரதத்தில் மோதி வெள்ளவத்தைப் பகுதியல் வைத்து ஒருவர் பலியாகியுள்ளார்.

படுகாயங்களுக்குள்ளான அவர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னரே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் 30 வயதுடைய வெள்ளவத்தையில் வசிக்கக் கூடியவர் என தெரியவந்துள்ளது.

இதுதவிர கடுகன்னாவ பகுதியில் வைத்து 50 வயதுடைய நபர் ஒருவர் ஓடும் புகையிரதத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார்.

கொழும்பிலிருந்து கண்டி நோக்கி புறப்பட்ட புகையிரதத்தில் மோதியே இவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் தொடர்பில் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்றும் உயிரிழந்தவரின் சடலம் கடுகன்னாவ வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதற்கிடையில் கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி புறப்பட்ட புகையிரதத்தில் மோதி இரு இளைஞர்கள் காயமடைந்துள்ளனர்.

ஏறாவூர் பிரதேசத்தில் தண்டவாளத்தில் தூங்கிக் கொண்டிருந்த இளைஞர்கள் இருவரே புகையிரதத்தில் மோதியுள்ளதுடன் இருவரும் ஏறாவூர் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மத்திய வங்கி பிணைமுறி விசாரணை அறிக்கையை வெளியிட நீதிமன்றம் தடை!
Next post தேர்தல் ஆணையாளரை சந்திக்கின்றது கூட்டமைப்பு!!