உடல் எடையைக் குறைக்க உதவும் ஆயுர்வேத டீ..!!!

Read Time:3 Minute, 13 Second

timthumb (2)உடல் எடையால் பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறீர்களா? உங்களுக்கு உடற்பயிற்சி செய்வதற்கெல்லாம் நேரம் இல்லையா? அப்படியெனில் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆயுர்வேத சிகிச்சையை மேற்கொள்ளுங்கள். ஆயுர்வேத சிகிச்சையை மேற்கொள்வதால் உடல் எடை குறைவதோடு, பொலிவான மற்றும் அழகான சருமத்தைப் பெறலாம்.

பத்தே நாள் தான் டைம்.. அதுக்குள்ள தொப்பையை சுருக்கனும்.. எப்படி?…

இப்படிச் செய்யலாம்! அதுவும் ஒரே ஒரு ஆயுர்வேத டீயை அன்றாடம் குடித்து வந்தால் போதும், உங்கள் உடலில் தேங்கியுள்ள கொழுப்புக்கள் கரைந்து, நச்சுக்கள் அனைத்தும் வெளியேறி, சிக்கென்ற உடலமைப்பைப் பெறலாம். பொதுவாக ஆயுர்வேத மருத்துவத்தில், மூலிகைகள் மற்றும் சமையலறையில் இருக்கும் பொருட்களைக் கொண்டு தான் சிகிச்சைகள் மேற்கொள்ளப்படும்.

நைட் தூங்கும் போது இத குடிச்சா தொப்பை குறையுமாம்…!

இங்கு கொடுக்கப்பட்டுள்ள ஆயுர்வேத டீயானது சமையலறையில் எளிதில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் ஓர் டீயாகும். சரி, இப்போது இந்த ஆயுர்வேத டீயை எப்படி செய்வதென்றும், இதனை குடிப்பதால் என்ன நன்மைகள் கிடைக்கும் என்றும் பார்ப்போ

இரத்தம் சுத்தமாகும்

ஆயுர்வேத டீயைக் குடிப்பதால், அதில் உள்ள மசாலாப் பொருட்கள் இரத்தத்தில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, இரத்தத்தை சுத்தமாக்கும்.

செரிமானம் மேம்படும்

ஆயுர்வேத மூலிகை டீ குடிப்பதனால், செரிமான பாதை சுத்தமாகி, செரிமான மண்டலத்தின் இயக்கம் சீராக நடைபெற்று, செரிமான பிரச்சனைகள் ஏற்படுவது தடுக்கப்படும்.

உறுப்புக்களின் ஆரோக்கியம்

மசாலாப் பொருட்களை சேர்த்து டீ செய்து குடிப்பதன் மூலம், உடல் உறுப்புக்களில் இருந்த இடையூறுகள் நீங்கி, அதன் செயல்பாடு அதிகரித்து, உடல் உறுப்புக்களின் ஆரோக்கியம் மேம்படும்.

எடை குறையும்

பொதுவாக சோம்பு, பட்டை, கிராம்பு போன்றவற்றில் உள்ள காரத்தன்மை, உடலில் தேங்கியுள்ள கெட்ட கொழுப்புக்களை கரைக்கும் தன்மை கொண்டவை. எனவே இந்த பொருட்களைக் கொண்டு டீ போட்டு குடிக்கும் போது, நிச்சயம் உடல் எடை குறையும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கேரளாவில் பெண்கள் உடைமாற்றும் அறையில் கேமரா பொருத்திய இளைஞர் கைது!!
Next post சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த முன்னாள் மாஜிஸ்திரேட்டின் முன்ஜாமின் மனு தள்ளுபடி!!