காதலியைக் குத்திக் கொன்றுவிட்டு காதலனும் தற்கொலை செய்த பரிதாபம்!!

Read Time:1 Minute, 32 Second

ffc7148f-a19d-4055-9e71-210bb7646229_S_secvpfபஞ்சாப் மாநிலத்தில் காதலித்த பெண்ணை குத்திக்கொன்ற வாலிபர் தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அந்த மாநிலத்தின் குருதாஸ்பூர் மாவட்டத்திலுள்ள கோத்லி வீரன் கிராமத்தைச் சேர்ந்த அமர்ஜீத் சிங் என்பவர் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்தார்.

நேற்று இரவு தனது காதலியின் வீட்டுக்கு சென்று அவரை குத்திக் கொன்றுவிட்டு தானும் மரத்தில் தூக்குமாட்டிக் கொண்டு தற்கொலை செய்தார். அமர்ஜீத்தின் இந்த முடிவுக்கு காரணம் ஏதும் தெரியவில்லை. அவர்கள் இருவரது உடல்களும் பிரேத பரிசோதணைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டன.

அமர்ஜீத்தும் அவரது சகோதரரும் சேர்ந்து அமிர்தசரஸ் மாவட்டத்தின் பதனா கல்சியா கிராமத்தில் கடந்த 2012-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஒரு பெண்ணை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டிருந்தனர். அமர்ஜீத் சமீபத்தில் தான் பெயிலில் வந்தது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த முன்னாள் மாஜிஸ்திரேட்டின் முன்ஜாமின் மனு தள்ளுபடி!!
Next post உத்தரபிரதேசத்தில் துப்பாக்கியால் சுட்டு விவசாயி தற்கொலை!!