சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த முன்னாள் மாஜிஸ்திரேட்டின் முன்ஜாமின் மனு தள்ளுபடி!!

Read Time:1 Minute, 38 Second

7fbfb44a-cb62-49b3-b449-84081debfdf2_S_secvpfசத்தீஸ்கரில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து தலைமறைவான முன்னாள் மாஜிஸ்திரேட் தாக்கல் செய்த முன் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

அங்குள்ள கர்சியா பகுதியில் உள்ள நீதிமன்றத்தில் துணை மாஜிஸ்திரேட்டாக இருந்தவர் அசோக் குமார் டரித்லாகர். அவரது வீட்டில் பணிபுரிந்த 16 வயது சிறுமியை அசோக் குமார் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அச்சிறுமி புகார் அளித்ததை தொடர்ந்து அசோக் குமார் மாஜிஸ்திரேட் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

இந்த நிலையில் தலைமறைவாக இருக்கும் அசோக் குமார் தனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதன் மீதான விசாரணை நேற்று நடைபெற்றது. அப்போது அசோக் குமார் தாக்கல் செய்த முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்வதாக நீதிமன்றம் அறிவித்தது. இதனையடுத்து நீதிமன்ற உத்தரவு அவரது வீட்டின் முன்பு ஒட்டப்பட்டுள்ளது. தலைமறைவாக இருக்கும் அசோக்குமாரை கைது செய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உடல் எடையைக் குறைக்க உதவும் ஆயுர்வேத டீ..!!!
Next post காதலியைக் குத்திக் கொன்றுவிட்டு காதலனும் தற்கொலை செய்த பரிதாபம்!!