மொபைல் ஹெட்போன் வாங்கித் தராத அக்காவை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற தம்பி!!

Read Time:1 Minute, 33 Second

78e1c76d-7a19-4ef0-9347-2df2f9123171_S_secvpfமிசோரம் மாநிலத்தில் மொபைல் ஹெட்போன் வாங்கித் தராததால் ஆவேசமடைந்த சிறுவன் தனது அக்கா மற்றும் மாமாவை சுட்டுக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஐசால் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 16 வயதான சிறுவன், தனது அக்காவிடம் செல்போன் ஹெட்போன் வாங்கித் தருமாறு தொடர்ந்து தொந்தரவு கொடுத்துள்ளான். ஆனால், ஹெட்போனை அவர் வாங்கித் தரவில்லை என்று தெரிகிறது. இதனால், ஆவேசமடைந்த அச்சிறுவன் விலங்குகளை வேட்டையாடப் பயன்படுத்தும் துப்பாக்கி மூலம் தனது அக்காவை சுட்டுக் கொன்றான்.

இதனை தடுக்க வந்த அக்காவின் கணவரையும் படுகொலை செய்த அச்சிறுவன், வீட்டில் இருந்த 36 ஆயிரம் ரூபாயை திருடிச் சென்றான். இதனையடுத்து அச்சிறுவனைக் கைது செய்த போலீசார், சிறார் நீதிமன்றத்தில் அவனை ஆஜர்படுத்தி, சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைத்தனர்.

மொபைல் ஹெட்போனுக்காக தனது அக்கா மற்றும் மாமாவை சிறுவன் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இந்தியாவின் எதிர்ப்பை அடுத்து சர்வதேச எல்லையில் அமைக்கப்பட்டிருந்த உளவு கேமராக்களை அகற்றியது பாகிஸ்தான்!!
Next post கேரளாவில் பெண்கள் உடைமாற்றும் அறையில் கேமரா பொருத்திய இளைஞர் கைது!!