தவறான பாலியல் குற்றச்சாட்டால் 7 ஆண்டுகள் சிறையில் கழித்த அப்பாவி மனிதனின் துயரக் கதை!!

Read Time:4 Minute, 10 Second

6707ad81-570a-440d-9239-0bf5e4a2d799_S_secvpfஓட்டல் மேனேஜ்மென்ட் படித்த பட்டதாரியான கோபால் ஷெட்டி மும்பையில் உள்ள ஒரு ஓட்டலில் சமையல் கலைஞராக வேலை பார்த்து வந்தார். அன்பான மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் மற்றும் பெற்றோருடன் சந்தோஷமாக வாழ்க்கை சென்றது. மற்றவர்களைப் போல முடிந்தவரை தனது குழந்தைகளுக்கு நல்ல கல்வியை வழங்க கனவு கண்டார். ஆனால், தனது வாழ்க்கை விரைவில் நொறுங்கப் போகிறது என்று ஒருபோதும் கற்பனை செய்து பார்த்திருக்க மாட்டார்.

29-7-2009 அன்று மும்பை போலீசார் கோபாலை கைது செய்தனர். அவர் மீது பாலியல் பலாத்கார குற்றம் சுமத்தப்பட்டது. துரிதகதியில் நடந்து முடிந்த விசாரணையில் அவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது அம்மாநில உயர்நீதிமன்றம். தண்டனை காலத்தை முடித்துவிட்டு கடந்த ஜூன் மாதம் 10-ம் தேதி விடுதலையானார் கோபால்.

இந்த 7 ஆண்டுகளில் அவரது வாழ்க்கையில் பல மாற்றங்கள் நடந்துவிட்டன. அவர் அம்மா இறந்துவிட்டார், மனைவி மறுமணம் செய்துக்கொண்டார், பிள்ளைகள் அனாதை ஆசிரமத்தில் விடப்பட்டார்கள். சிறை அவருக்கு காச நோய்யை பரிசாக கொடுத்தது. சிறையில் இருந்தப்படி பெயில் பெற முயற்சித்தும் கிடைக்கவில்லை.

எந்த குற்றமும் செய்யாத தனக்கு தண்டனை வழங்கப்பட்டுவிட்டதாக குமுறும் கோபால், தான் குற்றம் செய்யவில்லை என்பதற்கான ஆதாரமாக முன்வைக்கும் சான்றுகளை யாராலும் மறுக்க முடியாது.

பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டவரின் வாக்குமூலம் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்படவில்லை. சி.சி.டி.வி. பதிவுகள் அடிப்படையில் கோபால் கைது செய்யப்பட்டுள்ளார். எனினும், அந்த காட்சிகள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை. பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண் மற்றும் பாலியல் பலாத்காரம் செய்தவர் ஆகிய இருவரையும் மருத்துவமனைக்கு அழைத்து சென்ற ஆட்டோ ஓட்டுனர் சாட்சியம் கொடுக்கவில்லை. மருத்துவமனை ஊழியர்களும் சாட்சியமாக அழைக்கப்படவில்லை.

எல்லாவற்றிருக்கும் மேலாக பாலியல் பலாத்காரம் செய்த அந்த நபர் தன் பெயர் கோபி என்று அந்த பெண்ணிடம் கூறியுள்ளார். அப்படி பார்த்தாலும் கோபாலும் கோபியும் ஒன்று என நீதிமன்றமும் போலீசும் முடிவு செய்தது எப்படி? என்று தெரியவில்லை என்கிறார் கோபால்.

தற்போது தனக்கு உள்ள பொருளாதார முறையில் ஒன்று காசநோய்க்கு மருத்துவம் பார்க்கலாம் அல்லது நீதிக்காக போராடலாம் என கூறும் கோபால், தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக போராட முடிவு செய்துவிட்டார். அம்மாநில முதல்வர் தேவேந்திர பட்நாவிசை சந்திக்க வாய்ப்பு கேட்டு உண்ணாவிரத போராட்டம் நடத்திவருகிறார்.

சிறையில் கழித்த 7 ஆண்டுகளுக்கு அரசும் நீதிமன்றமும் பதில் சொல்லியாக வேண்டும் என்கிறார் கோபால்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 5 நட்சத்திர ஓட்டலை வாடகைக்கு எடுத்து கடல் சிங்கத்துக்கு பர்த்டே பார்ட்டி கொடுத்த சீன கோடீஸ்வரர்!!
Next post இந்தியாவின் எதிர்ப்பை அடுத்து சர்வதேச எல்லையில் அமைக்கப்பட்டிருந்த உளவு கேமராக்களை அகற்றியது பாகிஸ்தான்!!