ஐதராபாத்தில் இளம் சகோதரிகள் குத்திக் கொலை!!

Read Time:1 Minute, 50 Second

d03f44a5-6ced-4156-b672-165a95400a89_S_secvpfஐதராபாத்தில் இன்று பட்டப்பகலில் இரண்டு இளம்பெண்கள் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஐதராபாத்தில் உள்ள காயத்ரி நகர் என்ற பகுதியில் வசிப்பவர்கள் சரஸ்வதி யாமினி (22) மற்றும் இவரது தங்கை ஸ்ரீலேகா (20). இதில் மூத்தவரான யாமினி சரஸ்வதி பி.டெக் படித்துள்ளார். ஸ்ரீலேகா இன்ஜீனியரிங் கல்லூரியில் படித்து வருகிறார்.

இந்நிலையில், இன்று காலை அவர்களது வீட்டினுள் புகுந்த ஒரு வாலிபர் ஸ்ரீலேகாவை சரமாரியாக கத்தியால் குத்தினான். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த யாமினி சரஸ்வதி அந்த வாலிபரை தடுக்க முயன்றார். ஆத்திரம் அடைந்த அவன் அந்தப் பெண்ணையும் குத்திவிட்டு தப்பியோடினான்.

இந்தச் சம்பவத்தை அறிந்து போலீசார் விரைந்து வந்து, துடிதுடித்து கொண்டிருக்கும் இரண்டு பேரையும் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். தீவிர சிகிச்சையளித்தும் பலனின்றி அவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதுபற்றிய முதற்கட்ட விசாரணையில் கொடூராமாக கொலை செய்த அந்த வாலிபர் ஏற்கனவே ஸ்ரீலேகாவிற்கு அறிமுகமான நபர் என்பது தெரியவந்துள்ளது. தப்பி ஓடிய அவன் மீது வழக்குப்பதிவு செய்த சைதன்யாபுரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மேற்கு வங்காளம்: ஜப்பான் மூளையழற்சி நோய் பாதிப்பால் சிறுவன் பலி!!
Next post 50 பெண் குழந்தைகள் பிறந்ததை விழா எடுத்து கொண்டாடிய அரியானா கிராமம்!!