வாய்க்கால் போடும் எளிய இயந்திரம் ரஜீதனினால் உருவாக்கம்!!
யாழ்.விவசாய பீடத்தில் இன்னொரு அதிசயம் நிகழ்ந்திருக்கின்றது. இறுதியாண்டு மாணவர்களின் ஆய்வுகளின் முடிவுகளில் ஒவ்வொன்றும் சிறப்புக்குரியதாகும். விவசாய பீடத்தின் இறுதியாண்டு விவசாய இயந்திரவியல் சிறப்பு மாணவனான மகேஸ்வரன் ரஜீதனின் வயலில் நீர்பாய்ச்சுவதற்கான வாய்க்கால் போடும் எளிய இயந்திரத்தை அண்மையில் கண்டுபிடித்துள்ளார். விவசாய பீடத்தின் வெள்ளிவிழாவினை சிறப்பிக்கும் வகையில் இத்தகைய இறுதியாண்டு மாணவர்களின் கண்டுபிடிப்புக்கள் பெருமைசேர்க்கின்றன.
முழுக்க முழுக்க உள்ளூர் பொருட்களைக்கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள இவ்வியந்திரம் விளைநிலத்தில் வேண்டியபடி வாய்க்காலை தயாரிக்க உதவியாகவுள்ளது என தயாரிப்பில் ஈடுபட்ட மாணவன் ரஐPதன் கூறினார். இந்த முயற்சிக்கு எழுதும் இக்கைகள் மனமார்ந்து பாராட்டுக்களைத் தெரிவிக்கின்றது. பீடத்தில் இவ்வாறான புத்தாக்க நிகழ்வுகள் இடம்பெறுவது எமக்கு மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் தருகின்றது.
விவசாயபீடத்தின் கற்கைநெறியில் இறுதியாண்டு அரையாண்டில் மாணவருக்கான ஆய்வு ஒழுங்குசெய்யப்பட்டது. இதில் இம்மாணவன் தனது முழுமையான முயற்சியில் இவ்வியந்திரத்தை உருவாக்கியுள்ளார். இம்மாணவனுக்கு ஆலோசகராகவும் வழிகாட்டியாகவும் சிரேஷ;ட விரிவுரையாளர் கலாநிதி ஆழ்வாப்பிள்ளை அவர்கள் உதவியுள்ளார். கலாநிதி ஆழ்வாப்பிள்ளை அவர்கள் இதற்கு முதல் எளிய வகையிலான பல இயந்திரங்களை உருவாக்கியவராவர்.
வழமையாக விளைநிலத்தில் நீர்பாய்ச்சுவதற்கான வாய்க்கால் போடுவதற்கு இதுவரையும் கையினால் மண்வெட்டி கொண்டு மட்டுமே போட முடிந்துள்ளது. தற்போது இந்த வேலைப்பளுவை எளிய இயந்திரத்தின் மூலம் இலகுவாக்கப்பட்டுள்ளது. விரும்பிய வகையில் விரும்பிய அளவில் விளைநிலத்தில் அது வயலாயினும் சரி அல்லது தோட்டமானாலும் சரி வாய்க்கால்கள் இவ்வியந்திரத்தின் மூலம் அமைக்க முடியும். இதனை உழவு இயந்திரத்தில் இலகுவாக இணைக்கக்கூடியவாறு உருவாக்கப்பட்டுள்ளது. இவரது இக்கண்டுபிடிப்பு எமது விவசாயபெருமக்களுக்கு பெரியதொரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளதென்றால் மிகையாகாது. தரவையாயினும் சரி மேடும் பள்ளமுமான கிடைதளத்தில் விளைநிலத்தில் இந்த இயந்திரத்தை பயன்படுத்தி வாய்க்கால்களை ஏற்படுத்திக்கொள்ளலாம்.
இந்த கண்டுபிடிப்பினை செய்துள்ள மாணவன் மகேஸ்வரன் ரஜிதன் பன்முகதிறமைகள் கொண்ட சிறப்புக்குரிய மாணவனாகும். கிளிநொச்சியை பிறப்பிடமாகக் கொண்ட இவர் விவசாய பீடத்தில் மிகவும் அமைதியான சுபாவங்கொண்ட திறமையாளனாகும். பல மாணவர்களுக்கு முன்னுதாரணமாக விளங்கும் இவரைப்பற்றிய எமக்குத் தெரிந்த எம்மினிய உறவுகள் தெரிந்துகொள்ள வேண்டியனவுண்டு. வழமையாக கற்கின்ற காலங்களில் நேரம்கிடைக்கின்ற போதிலெல்லாம் சுயவேலை செய்வதையே வழக்கமாக்கிக் கொண்டவராவர்.
தமது குடும்பத்தின் வாழ்க்கைச்சுமையையும் தனது கற்றல் சுமையையும் தான் உழைத்த பணத்தில் தீர்த்துக்கொள்பவர். வயறிங் வேலைகள் இவருக்கு கைவந்த கலை. கற்கும் போதே உழைத்தல் என்னும் சொற்தொடருக்கு சிறப்புடனான உதாரணத்திற்குரியவர் ரஜிதன் ஆகும். சகமாணவர்களிடம் அன்பாகவும் குறிப்பாக இளையவர்களிடம் மிகவும் அன்பாக இருந்த இவரைப்பற்றி பீடத்தில் அனைவரிடமும் நல்ல நம்பிக்கையும் மதிப்பும் இருக்கிறது. தமது பொன்னான நேரத்தை கற்றலிலும் சிறுதொழில் செய்வதிலும் செலவழிக்கும் இம்மாணவனால் அவரது குடும்பம் வாழ்ந்துகொண்டிருக்கின்றது.
தொழிற்றுறை முயற்சியில் எமது கவனம் திசைதிருப்பப்படுகின்ற காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். எமது இளையவர்களை புத்தாக்கத்தின் நுணுக்கங்களுக்குள் உள்வாங்குவதன் மூலம் புதிய கண்டுபிடிப்புக்களை செய்திடமுடியும். தொழில்நுட்பத்தின் தேவையும் தொழிற்றுறை வளர்ச்சியும் சமமாகவே வளர வேண்டும். ஒன்றிலிருந்து இன்னொன்று பயன்பெறவேண்டும். எமது பிரதேசத்து வளங்களை நாம் வினைத்திறனாக பயன்படுத்துவதற்கும் இளையவர்களுக்கான தொழில்வாய்ப்பை அதிகரிப்பதற்கும் தொழில்நுட்பத்தின் அவசியம் உணரப்பட்டுள்ளது. இதனை மாணவர்கள் மூலம் நாம் உருவாக்கிக் கொள்வதன் மூலம் அவர்களின் சிந்தனாசக்தியை அதன் வளத்தை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளலாம். புத்தாக்கத்திற்கான வசதிவாய்ப்புக்களை நாம் ஏற்படுத்திக்கொள்ளும் போது அதன் மூலம் எமக்கு தேவையான தொழில்நுட்பத்தை உள்ளீர்த்து தொழிற்றுறையை பெருக்கிக் கொள்ளலாம்.
வாழ்வாதாரத்தை முன்னெடுக்கின்ற அதேவேளையில் வருமானத்தையும் எளிய தொழில்நுட்பத்தினையும் உருவாக்குவதிலிலுந்து நாம் மாறிவிடக்;கூடாது. இன்னும் இதுபோல பலவற்றை உருவாக்க இவர்போன்ற மாணவர்களின் பங்களிப்பு அவசியமாகின்றது. இவ்வியந்திரம் பற்றிய மேலதிக தகவல்களுக்கு விவசாயபீட பொறியியல் துறையை அணுகிப்பெற்றுக்கொள்ளலாம். எமது மாணவர்களின் முயற்சிக்கு எம்மாலான ஊக்குவிப்பே முக்கியமானதாகும். தொடர்ச்சியான கலந்துரையாடல்களுக்கு மத்தியிலும் அமெரிக்காவின் ரெக்ஸ்ராஸ் மாநிலத்திலிருந்து இச்செய்த்pயை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் எழுதும் இக்கைகள் மகிழ்கின்றன. முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்.
Average Rating