புங்குடுதீவு வித்தியாவின் படுகொலையில் அரசியலா? சட்டத்தரணி தவராசா ஒதுங்கியது நியாயமா??.. -உண்மைத் தமிழன். (சிறப்புக் கட்டுரை)

Read Time:16 Minute, 21 Second

timthumbபுங்குடுதீவு வித்தியாவின் படுகொலையில் அரசியலா? சட்டத்தரணி தவராசா ஒதுங்கியது நியாயமா??.. -உண்மைத் தமிழன். (சிறப்புக் கட்டுரை)

இலங்கை என்ற ஒரு நாடு இருக்கிறது என்பது அறியாத உலக மக்கள் அநேகர் இன்றும் உலகில் இருக்கிறார்கள். ஆனால் அவர்களில் பலருக்கு இலங்கை தெரியாவிட்டாலும் ஜப்னா, ஈழம் போன்ற பெயர்களால் வட இலங்கையை நன்றாக அறிந்து வைத்துள்ளாகள். அதற்கு முக்கிய காரணம் கடந்த 30 வருடங்களாக நடந்த யுத்தமாகும். ஒரு தலைமுறையினர் தமது பூர்வீகத்தை நேரில் காணாமலேயே வெளிநாடுகளில் வாழ்ந்து கொண்டும் இருக்கிறார்கள். மேற்கத்தைய கலாச்சாரத்தில் வாழும் இவர்களுக்கு தெற்காசியாவின் அரசியலை புரிந்து கொள்வது மிகவும் கடினமாக இருக்கிறது. படுகொலைகளிலும் கற்பழிப்புகளிலும் அரசியல் செய்வது புரியாத புதிராகவுள்ளது.

குறிப்பாக இலங்கை அரசியல் தலைவர்கள் கொலைக்காரர்களாகவும்> கொள்ளைக்காரர்களாகவும்> கற்பழிப்பு குற்றங்கள் செய்தவர்களாகவும்> போதைப்பொருள் வியாபார உரிமையாளர்களாகவும்> மதுபானசாலைகள் உரிமையாளர்களாகவும்> அநேகர் உயர்தரம் வரையிலுமாவது கல்வி தகைமையற்றவர்களாகவும்> சிலர் சாதரணதர கல்வி தகைமையாவது இல்லாதவர்களாகவுமே இருக்கின்றனர்.

இலங்கை பாராளுமன்றத்துக்குச் செல்ல பொது தகைமையாக “ஊர் சண்டியனாக இருக்க வேண்டும்” என்ற தகைமை எழுதப்படாத, பகிரங்கமாக அறிவிக்கப்படாத ஒரு தகைமையாக உள்ளது. இந்த தகைமையை நன்றாக அறிந்தவர்கள் அரசியல்வாதிகளின் குடும்பத்தினர் ஆவார்கள்.

தென் இலங்கை சிங்களவர்கள், வட தமிழர்கள் மீது பொறாமைப்பட ஒரு காரணம் வட தமிழர்கள் புத்திசாதூர்யமாக தீர்மானங்கள் எடுப்பவர்கள் என்பதனாலாகும். இந்த வட தமிழர்களின் புத்திசாதூர்யம் கடந்த 30 வருடங்களாக யுத்தத்தோடு கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து வருவதை அவதானிக்கின்றோம். எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் வடக்கின் அறியாமை எந்த அளவுக்கு வெளிப்படப் போகிறது என்பதை பொறுத்திருந்த பார்க்க வேண்டியுள்ளது.

யுத்த காலத்தில் வாலிபர்களுக்குக் கிடைக்காத போதைவஸ்துக்கள் இப்பொழுது தாராளமாக கிடைப்பதாகவே செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கிறது. அரசியல்வாதிகளும், உள்ளுர் சண்டியர்களாக தைரியமாக பேட்டிக் கொடுக்கும் அளவுக்கு புத்தி மங்கிப்போனதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.

இந்த மாற்றத்தை தான் தென் இலங்கை சிங்கள தலைவர்கள் எதிர்பார்த்தார்கள் என்பதை மூத்த அரசியல்வாதிகள் மறுக்க மாட்டார்கள் என்று நம்புகிறேன். ஊர் சண்டியர்களாக எதிர்வரும் தேர்தலில் வடக்கிலிருந்து பாராளுமன்றத்திற்கு எத்தனைபேர் தெரிவாகின்றார்களோ அவர்களுக்கு மகிந்த பிரதமாரானாலும், ரனில் பிரதமரானாலும் நல்ல சலுகைகள் கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை. போதைவஸ்து வியாபாரிகளுக்கும், மதுபானசாலை உரிமையாளர்களுக்கும் நாள்தோறும் பண்டிகை தான்.

இந்த ஊர் சண்டியர்களின் தேர்தல் விளம்பர செலவுகள் எல்லாம் அடுத்த தலைமுறையை அழிக்கும் வியாபாராத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் பார்த்துக் கொள்வார்கள். உண்மையில் மக்கள் பிரதிநிதி என்றபெயரில் போதைவஸ்து, மதுபான பிரதிநிதிகள் வடக்கிலிருந்து பாராளுமன்றத்துக்குச் செல்வார்கள்.

இந்த நிலைமையை தடுப்பதற்கு என்னவழி?….

ஒரே நாளில் ஒரே தேர்தலில் முற்றாக இந்த நிலைமையை மாற்ற எம்மால் முடியாது. ஆனால் ஏதாவது ஒரு மாற்றத்தையாவது எம்மால் செய்ய முடியும். நம் சகோதரி வித்தியாவின் படுகொலையில் அரசியல் செய்வதையாவது எம்மால் தடுத்து நிறுத்த முடியும். படுபாவிகள் பலரால் கற்பழிக்கப்பட்டு, படுகொலைசெய்யப்பட்ட நம் சகோதரி வித்தியாவின் சிதைந்த உடலை வைத்து அரசியல் செய்யும் துஷ்டர்களை மக்கள் அடையாளம் கண்டுகொண்டு, அவர்களுக்கு இந்த தேர்தலில் தக்க பாடம் கற்பித்தால் ஒரு படி முன்னேறிய மகிழ்ச்சியையாவது வட தமிழர்கள் அனுபவிக்கலாம்.

பிரபல சட்டதரணி கே.வீ தவராசா அவர்கள் வித்தியாவின் கொலை வழக்கில் ஆஜரானது, சில வட அரசியல்வாதிகளுக்கு பிடிக்கவில்லை என்பதை நடந்த சம்பவங்கள் மிகத்தெளிவாக காண்பிக்கிறது. அவர் ஆஜரான உடனேயே, கே.வீ தவராசா மே மாத ஆரம்பத்தில் சுவிஸ் நாட்டுக்குச் சென்ற நேரத்தில் அவருடன் சுவிஸ்ரஞ்சன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தைப் போட்டு, “வித்தியாவை கற்பழித்துக் கொலை செய்த நபருடன் தவராசா!, குற்றவாளியின் நண்பனால் வித்தியாவுக்கு நியாயம் கிடைக்குமா?” என்று மிகவும் தந்திரமாக திரு. தவராசா அவர்களை இந்த வழக்கில் ஆஜராகாமல் தடுக்க முனைந்தார்கள் நம் மதிப்புக்குறிய அரசியல்வாதிகள் சிலர்.

கைது செய்யப்பட்ட சுவிஸ் குமாரை காப்பாற்றவே தவராசா முனைகிறார் என்று அவதூறு பரப்பியவர்களில் ஒரு பெண் சட்டத்தரணியும் உள்ளார் என்பது இன்றும் எனக்கு வேதனை தரக்கூடிய செயலாகவே உள்ளது. “இத்தனை சட்டதரணிகள் யாழில் இருக்க, வித்தியாவுக்காக வழக்காட கொழும்பிலிருந்து தவராசா வர வேண்டுமா?” என்ற பொறாமையே தான் இந்த அவதூறை பரப்ப காரணம் என்று அப்பெண் தொலைபேசியில் வெளிநாட்டிலுள்ள ஒருவருக்குச் சொல்லியிருக்கிறாள்.

இப்படி பலரும் பல காரணங்களுக்காக தவராசா இந்த வழக்கில் ஆஜராகக் கூடாது என்று பொய் வந்திகளை பகிரங்கமாக பரப்பிக் கொண்டிருந்தாலும் அனைத்தையும் தகர்த்துக் கொண்டு “வித்தியாவின் குடும்பத்துக்கு நியாயம் பெற்றுக் கொடுப்பேன்” என்ற வீராப்போடு யாழ் சென்று வித்தியாவுக்காக ஆஜரானார் திரு.கே.வி.தவராசா.

வித்தியா படுகொலையில் அரசியல்…

ஐக்கிய தேசிய கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் மிகவும் தீவிரமாக வித்தியா படுகொலையில் தீர்மானங்கள் எடுப்பதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. யாழ் தமிழ் சட்டதரணிகளின் எதிர்ப்பையும் மீறி கொழும்பில் வாழும் கே.வீ தவராசா வித்தியா கொலை வழக்கில் ஆஜராகிய இரண்டு மாதங்களுக்குள் தனது அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி கொழும்பிலிருந்து சிங்கள சட்டதரணிகளை கொண்டு வந்து தவராசாவை ஓரங்கட்டிவிட்ட சூழ்நிலையே இப்பொழுது உருவாகியுள்ளது.

அதற்கு அவர் சொல்லும் காரணம் “வித்தியா படுகொலை தொடர்பிலான சான்றாதரங்களை அழிப்பதற்கு சிரமதானமென்ற பேரினில் புங்குடுதீவினில் கனரக வாகனங்கள் மூலம் தடயங்கள் இல்லாமல் செய்யப்பட்டுள்ளது. வித்தியாவினது உறவுகளது எதிர்ப்பினை தாண்டி அவ்வாறு தடயங்கள் அகற்றப்பட்டுள்ளன. வித்தியா படுகொலை வழக்கினை குழப்பியடிக்கவும் குற்றவாளிகளை தப்ப வைக்கவும் சுவிஸிலிருந்து பெருமளவு பணம் கைமாற்றப்பட்டுள்ளது. இது தொடர்பான ஆவணங்கள் எனக்கு கிட்டியுள்ளது. அவை விரைவினில் அம்பலப்படுத்தப்படும்”.

“சட்டத்தரணி தவராசா பொறுப்பாக கடமையாற்றாமையினாலேயே அரச சட்டத்தரணிகளாக மூவரை கொழும்பிலிருந்து தருவிக்க வேண்டிய ஏற்பட்டது. அவர்களுள் ஒருவர் எனது சகோதரன் மகேஸ்வரன் படுகொலை சூத்திரதாரிக்கு மரணதண்டனை வாங்கிக் கொடுத்த திறமையாளன் மட்டுமல்ல”..

வித்தியா கொலை சூத்திரதாரிகள் தண்டிக்கப்பட வேண்டுமென்பதில் நாம் உறுதியாக உள்ளோம். மக்களது நிலைப்பாடும் அவ்வாறாகத் தான் உள்ளது. குற்றவாளிகளை தப்பிக்க வைக்க இத்தகைய கும்பல்கள் செய்யும் முயற்சி வெற்றி அளிக்காதெனவும் அதற்கு மக்கள் அனுமதிக்கப் போவதில்லை”என்பதாகும்.

அரசியல் கூடுபிடித்துள்ள இந்த சந்தர்ப்பதில் இப்படியான கூற்றுக்கள் மக்களை சென்றடையும் என்பதை நன்றாக அறிந்து வைத்துள்ளார் துவாரகேஸ்வரன். இவர் அரசியல் துவாரங்களை நன்றாக அறிந்தவர் என்றே சொல்ல வேண்டும். இவர் மட்டும் தென் இலங்கையில் அரசியல் செய்தால் நிச்சயமாக அதிக சிங்கள வாக்குகளை வாங்குவார் என்பதில் சந்தேகமில்லை. எதிர்வரும் தேர்தலில் மட்டும் இவர் கட்சி யாழில் அமோக வெற்றி பெற்றால் யாழ் அனைத்து சீர்கேடுகளில் உறைவிடம் என்ற பெருமையை பெற அதிக வாய்ப்புள்ளது.

மேற்படி அரசியல்வாதி துவாரகேஸ்வரனிடம் எந்தவொரு ஆதாரங்களும் இருக்குமென்றால் அதனை நீதிமன்றத்திலோ, அல்லது மக்கள் நீதிமன்றத்திலோ பகிரங்கப் படுத்த வேண்டுமே தவிர, வெற்று அறிக்கை விடுவதும், “எதிரி”யாக ஊளையிடுவதும் முறையல்ல…

இன்று தவராசாவை தடுத்து நிறுத்தி சிங்கள சட்டதரணிகளை யாழுக்கு கொண்டு வந்தவர். நாளை யாழ் மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிட, கொழும்பிலிருந்து சிங்கள அரசியல் பிரதிநிதிகளும் ஊர் சண்டியன்களாக கொண்டு வரமாட்டார் என்பதற்கு என்ன உத்தரவாதம் உள்ளது?

கனம் கே.வீ. தவராசா அவர்களே!…

வித்தியாவின் தாயிடம் கையொப்பம் வாங்கச் சென்ற உங்களின் பிரதிநிதிகளுக்கு, கொழும்புக்குச் சென்றுள்ள தன் மகன் வரும்வரையில் பொறுத்திருக்குமாறு அந்த வேதனையில் மிதக்கும் தாய் சொன்னதாகவும், பிறகு அவரது மகன் “சிறிது காலம் பொறுத்திருக்குமாறு தனக்கு புங்குடுதீவு பெரியவர்கள் (வர்த்தகர்கள்) சிலர் சொல்லியுள்ளரென உங்களுக்கு சொன்னதாகவும்” ஒரு செய்தி கிடைத்தது. இதனால் உங்களின் பிரதிநிதிகளும் கோபத்துடன் கொழும்பு திரும்பி விட்டார்களாம்.

தன் ஆத்மா சாந்தியடைய இருந்த ஒரே நம்பிக்கையையும் இழந்த வித்தியாவின் ஆத்மா எவ்வளவு வேதனைப்பட்டிருக்கும் என்று கொஞ்சமாவது சிந்தித்தீர்களா? தனக்கு நடந்த கதி இனிமேல் எந்த ஒரு புங்குடுதீவு மாணவிக்கும் நடக்கக்கூடாது என்பது தானே வித்தியாவின் கடைசிநிமிட ஆசையாக இருந்திருக்கும். சட்டத்திலுள்ள துவாரங்களை நாங்கள் உங்களுக்கு சொல்லித்தர வேண்டுமா? ஒரு துவாரத்துக்குள்ளாக நுழைந்து, துவாரகேஸ்வரனை துவைத்தெடுத்து, ஊர் சண்டியர் அரசியலுக்கும் வடக்கில் முற்றுப்புள்ளி வைக்கலாமே?

வித்தியாவின் அண்ணனுக்கு….

வித்தியாவுக்கு நியாயம் கிடைத்தாலும் வித்தியா என்ன மீண்டும் உயிருடன் எழும்பவா போகிறாள்? என்ற சிந்தனையை புங்குடுதீவு கொழும்பு வியாபாரிகள் உங்களுக்கு கொடுத்திருக்கலாம். எதற்கு வீண்வம்பு, அமைதியாக வாழ்வோம் என்ற முடிவுக்கு நீங்கள் வந்திருக்கலாம். இந்த சுயநலபோக்குக்கு உங்கள் வறுமையும் ஒரு காரணமாக இருக்கலாம்.

ஒரு மனிதனாக பிறந்தால் இலட்சியத்தோடு வாழ வேண்டும். என் உடன்பிறவாத சகோதரி வித்தியாவுக்காக நான் இவ்வளவு எழுதுகிறேன் ஏன் தெரியுமா? நாளை இன்னுமொரு என் சகோதரி இதுபோன்ற கொடுமைக்கு முகம்கொடுக்கக் கூடாது என்பதற்காக. அதே உணர்வு உங்களுக்கும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.

திரு தவராசா அவர்கள் தொடர்ந்தும் இந்த வழக்கை எடுத்து பேச வேண்டும் என்று நீங்கள் அவரிடம் கேட்டுக் கொள்வதே வித்தியாவுக்கு நீங்கள் செய்யும் இறுதிக்கடன். அப்பொழுது தான் அவள் ஆத்மா சாந்தியடையும். நாம் அறிந்தவரை நாளையதினம் சட்டத்தரணி கே.வி.தவராசா ஆஜராகாத போதிலும் எதிர்வரும் காலங்களில் ஆஜராவார் எனவும், இதற்காக புலம்பெயர் உறவுகள் தொடர்ந்தும் பாடுபட்டு வருவதாகவும் அறிகிறோம்.. இது வரவேற்க கூடிய செயல்.

வட இலங்கையரே…

எதிர்வரும் தேர்தலில் ஊர் சண்டியர்கள் அதிகாரத்துக்கு வராதவாறு உங்கள் வாக்குகளை சரியான நபர்களுக்கு அளிக்குமாறு உங்களிடம் வேண்டி இந்த சிறிய கட்டுரையை நிறைவு செய்கிறேன்.

-உண்மைத் தமிழன்-

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post முன்னாள் பொலிஸ் அதிகாரி குலசிறிக்கு எதிரான வழக்கு பிற்போடப்பட்டுள்ளது!!
Next post முக்கிய கட்சிகளின் தேசியப் பட்டியலில் இடம்பெறுவோர் இவர்கள்தான்!!