பொது மக்களிடம் அர்ஜூண விடுக்கும் கோரிக்கை!!

Read Time:1 Minute, 57 Second

1579678608Untitled-1கட்சிகளுக்காக அன்றி நாட்டை நினைத்து அரசியல் தீர்மானத்தை மேற்கொள்ளுமாறு அமைச்சர் அர்ஜூன ரணதுங்க மக்களிடம் கோரிக்கைவிடுத்துள்ளார்.

நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியின் சார்பில் அர்ஜூன ரணதுங்க கம்பஹா மாவட்டத்தில் போட்டியிடுகின்றார்.

இதன்படி இன்று கம்பஹா மாவட்ட அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்த வேளை அர்ஜூன ரணதுங்க இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

நாம் கடந்த காலங்களில் கூறியது ஊழல்வாதிகள், கொலைகாரர்கள், போதைப் பொருளுடன் தொடர்புடையோருக்கு வேட்புமனு வழங்க வேண்டாம் என, ஆனால் அது இன்று நிறைவேற்றப்படவில்லை.

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் ராஜபக்ஷவின் சக்திகள் இன்றும் உள்ளது. உதாரணத்திற்கு கம்பஹா மாவட்டத்தை எடுத்துக் கொள்ளுங்கள். கொள்ளையடித்த, கம்பம் கோரியவர்களின் மனைவி மக்களுக்கு கூட வேட்புமனு வழங்கப்பட்டுள்ளது. இது பெரும் பகிடி.

இன்று வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடுபவர்கள் கடந்த காலங்களில் கொள்ளையடித்த குழுக்கள். இந்த நிலைமையை மாற்றி ஜனவரி 8ம் திகதி ஏற்படுத்திய மாற்றத்தை முன்னோக்கிக் கொண்டு செல்ல தற்போது நாம் அனைவரும் இணைய வேண்டும்.

கட்சியை விட நாடே முக்கியம், என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post டளஸ் அழகப்பெருமவுக்கு கொலை மிரட்டல்!!
Next post 20 நாட்களில் 13 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டால் எதிர்கால இந்தியா என்னவாகும்?