ஆண்டிப்பட்டி அருகே பள்ளி மாணவிகளுக்கு ஆசிரியர்கள் பாலியல் தொல்லை!!

Read Time:2 Minute, 3 Second

b1be13d0-9a7f-4aec-b22d-a0084c9bdc6b_S_secvpfதேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே அனுப்பப்பட்டியில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் சங்கராம்பட்டி, மேய்க்கிழார் பட்டி, சித்தையகவுண்டன் பட்டி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 300–க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.

இந்த பள்ளியில் 9 மற்றும் 10–ம் வகுப்பைச் சேர்ந்த 3 மாணவிகளை ஆசிரியர்கள் 2 பேர் செக்ஸ் சில்மிஷம் கொடுத்ததாக புகார் எழுந்தது. இது குறித்து மாணவிகள் தங்களது பெற்றோரிடம் கவலையுடன் தெரிவித்தனர். அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் மாவட்ட கல்வி அலுவலர் வாசுவிடம் தகவல் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து தேனி மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர்கள் சிவக்குமார், ரோஸ்லின் செல்வம், சைல்டு லைன் அலுவலர்கள் ராஜா மெர்லின் ஆகியோர் கொண்ட குழுவினர் மாணவிகளிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினர்.

அப்போது ஆசிரியர்கள் மாணவிகளுக்கு செக்ஸ் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது. இந்த செயலில் ஆசிரியர்கள் சிவக்குமார், ராஜசேகரன் ஆகியோர் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து ஆண்டிப்பட்டி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது.

போலீசார் 2 ஆசிரியர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவத்தை போலீசுக்கு தெரியாமல் மறைத்ததாக பள்ளி தலைமை ஆசிரியர் ஜனகராஜ் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நாமக்கல் பழக்கடை அதிபர் கொலையில் பிளஸ்–2 மாணவர் உள்பட 3 பேர் கைது!!
Next post ம.வி.மு ஆதரவாளர்கள் மீது தாக்குதல்!!