கிண்டி அடுக்குமாடி குடியிருப்பில் பெண்கள் குளிப்பதை வீடியோ எடுத்து பணம் கேட்டு மிரட்டிய 3 பேர் கைது!!

Read Time:1 Minute, 56 Second

4f0adfcb-b9c6-423b-abbe-086c6677f1c1_S_secvpfகிண்டி சக்கரபாணி தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர்கள் கீர்த்திவாசன், முத்துக்குமார். அதே குடியிருப்பின் காவலாளியாக இருப்பவர் ஆனந்தன். இவர் கீர்த்திவாசன் மற்றும் முத்துக்குமாரின் மகள்கள் குளிப்பதை செல்போனில் வீடியோ எடுத்தார்.

பின்னர் இருவரிடமும் பணம் கேட்டு மிரட்டினார். ஆளுக்கு தலா ரூ.5 லட்சம் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் உங்கள் மகள்கள் குளிக்கும் வீடியோவை இண்டர் நெட்டில் வெளியிடுவேன் என்று மிரட்டினார். கத்தி முனையிலும் பல முறை மிரட்டல் விடுத்தார். பணம் கொடுக்காவிட்டால் உங்கள் குடும்பத்தை இந்த குடியிருப்பில் வாழ விட மாட்டேன் என்று கூறினார்.

இதுபற்றி, கீர்த்திவாசன், முத்துக்குமார் இருவரும் கிண்டி போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து காவலாளி ஆனந்தனை கைது செய்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்திய போது அதே குடியிருப்பில் வசிக்கும் வின்சென்ட், ராஜகோபால் ஆகியோரின் தூண்டு தலின் பேரில் பெண்கள் குளிப்பதை வீடியோ எடுத்து பணம் கேட்டு மிரட்டியதாக தெரிவித்தார்.

இதையடுத்து தலைமறைவாக இருந்த வின்சென்ட், ராஜகோபால் ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கேரளாவில் பெண்களுக்காக பெண்களே ஓட்டும் புதிய பேருந்து சேவை விரைவில் அறிமுகம்!!
Next post சமூக வலைத்தளங்களில் மகாராஷ்டிர முதல்வர் பட்னாவிசின் குடும்ப புகைப்படத்தை வெளியிட்டவர் கைது!!