கேரளாவில் பெண்களுக்காக பெண்களே ஓட்டும் புதிய பேருந்து சேவை விரைவில் அறிமுகம்!!

Read Time:2 Minute, 6 Second

0b6776f9-d9ea-4002-864b-7963edede392_S_secvpfகேரளாவில் She taxi வெற்றியைத் தொடர்ந்து பெண்களுக்காக பெண்களே ஓட்டும் புதிய பேருந்து சேவை விரைவில் தொடங்கப்படவுள்ளது.

கேரளாவில் பெண்கள் பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ளும் வகையில் நாட்டிலேயே முதன் முறையாக 24 மணி நேரம் இயங்கும் பெண்களுக்கான She taxi போக்குவரத்து திட்டம் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டது. கல்லூரி செல்லும் இளம் பெண்கள் முதல் வயதான பாட்டி வரை இத்திட்டம் மாபெரும் வரவேற்பை பெற்றது.

இந்த வெற்றியின் தொடர்ச்சியாக, முழுக்க முழுக்க பெண்களுக்காக பெண்களே இயக்கும் புதிய பேருந்து சேவை அம்மாநிலத்தின் தலைநகரான திருவணந்தபுரத்தில் விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

இது குறித்து அம்மாநில சமூக நீதித்துறை அமைச்சர் எம்.கே. முனீர் கூறுகையில், “பெண்கள் பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ளும் வகையில் She taxi திட்டத்தை அறிமுகப்படுத்தினோம். இதன் வெற்றியைத் தொடர்ந்து “She Bus” திட்டத்தை மாநில தலைநகரான திருவனந்தபுரத்தில் அறிமுகப்படுத்த உள்ளோம்.

கொச்சி, கோலிக்கோடு ஆகிய நகரங்களில் இப்புதிய பேருந்துசேவை படிப்படியாக அறிமுகப்படுத்தப்படும். குளிர்சாதன வசதி கொண்ட இப்பேருந்தில் பெண்கள் குழந்தைகள் ஆகியோர் பயணிக்கலாம். டிக்கெட்டின் விலை அனைவராலும் ஏற்றுக் கொள்ளத்தக்க வகையில் நிர்ணயிக்கப்படும்” என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post டாக்டராக நடித்து பிரசவித்த பெண்ணை நிர்வாணமாக படம் பிடித்த வாலிபர் கைது!!
Next post கிண்டி அடுக்குமாடி குடியிருப்பில் பெண்கள் குளிப்பதை வீடியோ எடுத்து பணம் கேட்டு மிரட்டிய 3 பேர் கைது!!