உத்தரப்பிரதேசத்தில் பரிதாபம்: காதலியைச் சுட்டுக்கொன்று வாலிபரும் தற்கொலை!!

Read Time:1 Minute, 33 Second

8207d2e3-4fea-48b9-95ad-9c5a6ea4db23_S_secvpfஉத்தரப்பிரதேசம் மாநிலத்தில் காதலுக்கு பெற்றோர் சம்மதிக்காததால், விரும்பிய பெண்ணை சுட்டுக்கொன்ற வாலிபர் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இங்குள்ள சம்பல் மாவட்டத்தில் இருக்கும் அமாவதி கிராமத்தில், வசித்து வந்த வீர் பால்(22), அதே ஊரில் வசித்து வந்த 18 வயது இளம்பெண்ணை காதலித்து வந்தார். இவர்கள் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். இதற்கு இருவரின் பெற்றோரும் பலத்த எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால், தங்களது ஆசை நிறைவேறாது என்று உணர்ந்த வீர் பால், ’சேர்ந்து வாழ முடியாத நாம் சேர்ந்து சாகலாம்’ என காதலியிடம் தெரிவித்தார்; அவரும் இதற்கு சம்மதித்தார். இதையடுத்து, நாட்டுத் துப்பாக்கியைக் கொண்டு அவரது காதலியை சுட்டுவிட்டு, தன்னைத்தானே சுட்டுக்கொண்டு பரிதாபமாக பலியானார்.

இச்சம்பவம் தொடர்பாக தவலறிந்து விரைந்து வந்த போலீசார் இரு பிரேதங்களையும் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கல்லூரி கனவு வாய்க்காததால் விஷம் குடித்து இளம் பெண் தற்கொலை!!
Next post மாறியது காலம்: மாமனார் கொடுமை தாங்காமல் மருமகன் தற்கொலை!!