கல்லூரி கனவு வாய்க்காததால் விஷம் குடித்து இளம் பெண் தற்கொலை!!

Read Time:1 Minute, 50 Second

5f124fa9-315e-460b-847f-ceda68cf2367_S_secvpfஉத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் கல்லூரியில் படிக்க குடும்ப வறுமை தடையாக இருந்ததால், விஷம் குடித்து இளம் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.

அங்குள்ள பெரி கிராமத்தைச் சேர்ந்த சுனிதா என்ற இளம் பெண்ணே இந்த சோக முடிவை எடுத்தவர். சுனிதாவின் தந்தை பர்னிச்சர் கடை ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த சுனிதா, பள்ளிப் படிப்பை முடித்த பின்பு கல்லூரியில் சேரப் போவதாக தனது தந்தையிடம் தெரிவித்துள்ளார்.

குடும்ப வறுமை காரணமாக மகளின் கல்லூரிக் கனவை தந்தை ராஜ்குமார் சர்மா அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மனவிரக்தியடைந்த அவர், விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். சுனிதாவின் தற்கொலை முயற்சி குறித்து அறிந்த சுற்றத்தார், அவரை மருத்துவமனையில் சேர்த்தனர்.

இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு அவர் பரிதாபமாக உயிரிழந்தார். வழக்கு பதிவு செய்த போலீசார், சுனிதாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். கல்லூரியில் சேர முடியாததால் இளம்பெண் ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பிரதமர் மோடியின் தூய்மை இந்தியா திட்டத்தை ஆதரிக்கும் வெளிநாட்டு யானையின் சமூக பொறுப்புணர்வு: அட்டகாச வீடியோ!!
Next post உத்தரப்பிரதேசத்தில் பரிதாபம்: காதலியைச் சுட்டுக்கொன்று வாலிபரும் தற்கொலை!!