இடைக்கோடு அரசு ஆஸ்பத்திரியில் குடும்ப கட்டுப்பாடு செய்த பெண்ணுக்கு பிரசவம்: நஷ்டஈடு கேட்டு கலெக்டரிடம் மனு!!

Read Time:2 Minute, 16 Second

a00017c8-4a52-4e64-a598-da9a327ee303_S_secvpfவிளங்கோடு அருகே உள்ள தேவிகோடு மேல்பாலை பகுதியை சேர்ந்தவர் சுனி. இவரது மனைவி மினி இவர்கள் இருவரும் இன்று மாவட்ட கலெக்ரை சந்தித்து மனு ஒன்று அளித்தனர். அந்த மனுவில் மினி கூறி இருப்பதாவது:–

எங்களுக்கு 2010ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறது ஜெபிஷா, ஜெனிபா என்ற 2 மகள்கள் பிறந்தனர். இதையடுத்து கடந்த 2013ம் ஆண்டு இடைக்கோடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொண்டேன்.

மேலும் 2 பெண் குழந்தைகள் உள்ளதால் அரசு உதவி தொகை பெற விண்ணப்பித்து உள்ளோம். குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை சரிவர செய்யாததால் நான் மீண்டும் கருவுற்றேன். கடந்த மே மாதம் 2–ந் தேதி எனக்கு தனியார் ஆஸ்பத்திரி ஒன்றில் 3–வதாக பெண் குழந்தை பிறந்தது.

அதே மருத்துவமனையில் மீண்டும் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்தேன். இடைக்கோடு அரசு ஆரம்ப சுகாதார ஆஸ்பத்திரியில் தவறாகவும் கவனக்குறைவாகவும் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்ததால் நான் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளேன்.

இதனால் உடல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் அதிக அளவில் இழப்புகள் ஏற்பட்டு உள்ளது. 3 பெண் குழந்தைகளின் கல்வி, திருமணம் என ஏராளமான செலவுகளை சந்திக்க வேண்டியது உள்ளது. கூலி தொழிலாளியான எனது கவனரின் ஒரே வருமானத்தை மட்டுமே நம்பி உள்ளோம். எனக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு கருத்தில் கொண்டு ரூ.20 லட்சம் நஷ்டஈடு வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் மனுவில் கூறி உள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இளம்பெண்ணின் ஆபாச படங்களை இணையதளத்தில் வெளியிட்ட மாணவன் கைது!!
Next post காத்திருக்கும் கணவர்… பாசத்துக்காக ஏங்கும் குழந்தை: பவித்ரா மனம் மாறுவாரா?