மெகா ஸ்டாருக்கு மகளாக இருப்பதை விட சாதாரண குடும்பத்தில் வாழ ஆசைப்படுகிறேன்: சிரஞ்சீவி மகள் ஸ்ரீஜா பேட்டி
தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் மகள் ஸ்ரீஜா வீட்டை விட்டு வெளியேறி காதலர் ஷிரிஷ் பரத்வாஜை ரகசிய திருமணம் செய்தார். ஐதராபாத்தில் தலைமறை வாக இருந்த அவர்கள் டெல்லி கோர்ட்டில் ஆஜராகி பாது காப்பு கேட்டனர். கோர்ட்டு உத்தரவின் பேரில் அவர் களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. இரு வரும் டெல்லியில் தங்கி உள்ளனர். அங்கு ஸ்ரீஜா நிருபர்களுக்கு பேட்டி அளித் தார். அதன் விவரம் வரு மாறு:-
கேள்வி:- நீங்கள் ஏன் பாதுகாப்பு கேட்டு ஐதராபாத் கோர்ட்டை அணுகாமல் டெல்லி கோர்ட்டுக்கு வந்தீர்கள்.
பதில்:- எனது அப்பா ஒரு மெகா ஸ்டார். அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உண்டு. அவர்கள் எங்களை ஏற்க மாட்டார்கள். என் தந்தைக்கு (சிரஞ்சீவிக்கு) ஏதாவது ஒன்று என்றால் தாங்கிக் கொள்ள மாட்டார்கள். ஐதராபாத்தில் நாங்கள் நடமாட முடியாது. எங்கள் காதல் விவகாரம் ஏற்கனவே கசிய ஆரம்பித்த தும் ஷிரிஷ் மீது ரசிகர்கள் ஆத்திரத்தில் இருந்தனர். எனக்கு ரசிகர்கள் மீது பயம் கிடையாது. அவருக்கு ரசிகர் களிடம் பயம் இருந்தது. இதனால் டெல்லிக்கு வந்தோம்
எங்கள் காதலுக்கு இரு தரப்பிலும் எதிர்ப்பு கிளம்பியது. முதலில் ஜாதி குறுக்கிட்டதால் ஷிரிஷ் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். அத்துடன் மெகா ஸ்டார் மகள் என்பதால் அந்தஸ்தை நினைத்து பயந்தனர். நாங்கள் காதலில் உறுதியாக இருந்தோம். ஷிரிஷ் பெற்றோர் நல்லவர்கள். இதனால் என் மீது பாச மழை பொழிந்தனர்.
எங்கள் வீட்டில் அப்பா கண்டிப்பானவர். அவர் சொல்வதைத்தான் குடும்பத்தில் உள்ளவர்கள் கேட்பார்கள். அவர் எடுக்கும் முடிவுக்கு அனைவரும் கட்டுப்படுவார்கள். என் மீது அப்பாவுக்கு உயிர். நான் எது கேட்டாலும் வாங்கிக் கொடுப்பார். எனக்கு விருப்பமானவற்றை எல்லாம் நிறைவேற்றி வைப்பார். ஆனால் காதலை நிறைவேற்ற அவர் தயாராக இல்லை. காதல் விவகாரத்தில் என்னை புரிந்து கொள்ளவில்லை.
8 மாதமாக வீட்டுக்குள் அடைத்து வைத்தனர். யாருடனும் என்னை தொடர்பு கொள்ள விடாமல் வைத்து இருந்தனர். நாங்கள் 4 ஆண்டுகளாக காதலித்தோம். இப் போது எனக்கு 19 வயது ஆகிறது. முடிவு எடுக்கும் அதிகாரம், தகுதி எனக்கு உண்டு. இது நாங்கள் அவசரமாக எடுத்த முடிவு அல்ல.
கோடிகளுக்கு நான் ஆசைப்படவில்லை. மனசுக்கு பிடித்தவருடன் வாழ விரும்புகிறேன். மெகா ஸ்டார் மகளாக இருந்தால் ரசிகர்கள் என்னை மரியாதையுடன் பார்ப்பார்கள். நான் அதை விரும்பவில்லை. சாதாரணமானவளாக இருக்க விரும்புகிறேன். சாதாரண வாழ்க்கை வாழ ஆசைப்படுகிறேன்.
ஷிரிஷ் குடும்பம் ஒரு நடுத்தர சாதாரண குடும்பம். அந்த குடும்பத்தின் மருமகளாக, ஒரு சாதாரணமானவருக்கு மனைவியாகத் தான் வாழ ஆசைப்படுகிறேன். இங்கிருக்கும் சந்தோஷமும் மகிழ்ச்சியும் அங்கு கிடைக்கவில்லை.
இன்னொரு முறை அப்பா பத்திரிகைகள் மூலம் ரசிகர் களுக்கு வேண்டுகோள் விடுக்க வேண்டும். அப்போது தான் எங்கள் பயம் நீங்கும்.
என் சித்தப்பா (நடிகர் பவன் கல்யாண்) பற்றி எனக்கு கவலை இல்லை. அப்பா எடுக்கும் முடிவை ஏற்றுக் கொள்வார். அவரால் என் உயிருக்கு ஆபத்து இல்லை. ஷிரிஷ் தான் பயப்படுகிறார். எனவே அப்பா ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்தால் எந்த ஆபத்தும் வராது.
நாங்கள் தேனிலவுக்கு லண்டன் செல்ல திட்டமிட்டு இருக்கிறோம். உண்மையான காதல் என்றும் தோற்பது இல்லை. ஆண்களை விட பெண்கள் காதலில் உறுதியாக இருக்க வேண்டும். இவ்வாறு ஸ்ரீஜா கூறி னார்.