மனைவி மற்றும் குழந்தையை கோடரியால் வெட்டி சாய்த்தவருக்கு மரண தண்டனை!!

Read Time:1 Minute, 39 Second

ff48383c-5bc9-4102-963e-b955f94160aa_S_secvpfமனைவி மற்றும் மகளை தூக்கிலிட்டு கொன்றவருக்கு மத்திய பிரதேச மாநில மாவட்ட கோர்ட் மரண தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.

மத்திய பிரசேத மாநிலம் மன்பூர் கிராமத்தைச் சேர்ந்த அனில் சக்வார் (30) என்பவருக்கும் அவரது மனைவி மணிஷாவுக்கும் (28) இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. ஒருநாள் பிரச்சினை முற்றி மோதல் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த அனில் தனது மனைவி மற்றும் மகள் அனுஷ்கா (2) ஆகிய இருவரையும் கோடரியால் வெட்டினார். இதில் குழந்தை அனுஷ்கா சம்பவ இடத்திலேயே பலியானார். மனைவி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி பலியானார். இந்த சம்பவம் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 7-ந்தேதி நடைபெற்றது.

மனைவி மற்றும் மகளை தாக்கிய அனில் சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடிவிட்டார். பின்னர், போலீசார் அவரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில், அனிலுக்கு மரணதண்டனை விதித்து அம்பா கூடுதல் செசன்ஸ் நீதிபதி குப்தில் தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மும்பையில் மீண்டும் ஒரு சம்பவம்: குடிபோதையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய பெண் பேஷன் டிசைனர்!!
Next post கடனை திருப்பி செலுத்த முடியாததால் கர்நாடகாவில் 3 விவசாயிகள் தற்கொலை!!