இரு குழுக்களுக்கு இடையிலான மோதலில் நடிகர் கொலை!

Read Time:1 Minute, 18 Second

1027315350Untitled-1மஹரகம பிரதேசத்திலுள்ள உணவுவிடுதியொன்றில் இரு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் நடிகர் இந்திக பிரதீப் ரத்நாயக்க உயிரிழந்துள்ளார்.

இன்று அதிகாலை இந்த மோதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கருத்து முரண்பாடு காரணமாகவே இந்த மோதல் ஏற்பட்டுள்ளதாகவும் இதன்போது இந்திக்க பிரதீப் ரத்நாயக்க மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இதன்போது படுகாயமடைந்த அவரை களுபோவில வைத்தியசாலையில் அனுமதித்த வேளை பலியாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்திக பிரதீப் ரத்நாயக்கவுக்கு 44 வயது என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைதுசெய்யப்படவில்லை.

இது குறித்த மேலதிக விசாரணைகளை மஹரகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post துப்புரவு மேற்பார்வையாளர் கொலை முயற்சி வழக்கு: 7 பேர் கைது!!
Next post காவல் (திரைவிமர்சனம்)!!