ஜார்க்கண்ட் மாநிலத்தில் முன்னாள் முதல்-மந்திரி மகன் உள்பட 17 பேர் சுட்டு கொலை: நக்சலைட் தீவிரவாதிகள் அட்டூழியம்
ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல்- மந்திரி பாபுலால் மராண்டி. இவர் ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா என்னும் கட்சியை நடத்தி வருகிறார். இவர் தற்போது கோதெர்மா பாராளு மன்ற தொகுதி எம்.பி. ஆக உள்ளார். இவரது மகன் அனுப் மராண்டி. நேற்று மாலை அனுப் மராண்டியும் அவரது ஆதர வாளர்களும் கிரிதி மாவட்டத் தில் உள்ள சில்காடியா என்னும் கிராமத்தில் மிக பிரமாண்டமான கலைநிகழ்ச் சியை நடத்தினார்கள். முதலில் கால்பந்து போட்டி நடந்தது. போட்டி முடிந்ததும் பரிசளிப்பு விழா நடத்தப்பட்டது. அதன் பிறகு மைதானம் அருகே அமைக்கப்பட்டிருந்த மேடையில் ஆடல்-பாடல் கலை நிகழ்ச்சி நடந்தது. அனுப் மராண்டியும் அவரது ஆதரவாளர்களும் முன் வரிசையில் அமர்ந்து கலை நிகழ்ச்சியை ரசித்துப்பார்த்துக் கொண்டிருந்தனர். ஆயிரக் கணக்கானோர் அந்த மைதா னத்தில் திரண்டிருந்தனர். நள்ளிரவு சுமார் 1 மணிக்கு எல்லாரும் கலைநிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருந்த போது 25 முதல் 30 பேர் கொண்ட நக்சலைட் தீவிரவாதிகள் குழு ஒன்று பயங்கர ஆயுதங்களுடன் கூட்டத்துக்குள் புகுந்தது. கூட்டத்தில் ஊடுருவி அவர்கள் மெல்ல, மெல்ல முன் வரிசைப்பக்கம் வந்தனர். திடீரென அவர்கள் எந்திர துப்பாக்கி களை எடுத்து முன் வரிசை யில் இருந்தவர்களை குறி பார்த்து சுட்டனர்.
இந்த திடீர் தாக்குதலை கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் அலறியபடி நாலாபுறமும் சிதறி ஓடினார் கள். பாபுலால் மராண்டி ஆதரவாளர்கள், அனுப்பை இழுத்துக்கொண்டு தப்ப முயன்றனர். ஆனால் நக்ச லைட்டுக்கள் கை எறி குண்டு களை சரமாரியாக அவர்கள் மீது வீசினார்கள். இதில் அவர்கள் உடல் சிதறி பலியானார்கள்.
நக்சலைட்டுக்களின் தாக்கு தலில் முன்னாள் முதல்-மந்திரி பாபுலால் மராண்டியின் மகன் அனுப்சம்பவ இடத்திலேயே பலியானார். அவர் உடலில் ஏராளமான குண்டுகள் பாயந்து இருந்தது. அவருடன் மேலும் 13 பேர் சம்பவ இடத் திலேயே உயிரிழந்தனர்.
20-க்கும் மேற்பட்டவர்கள் குண்டு காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்தனர். அவர்களை மீட்டு மருத்துவ மனைகளில் சேர்த்தனர். அதில் சிகிச்சை பலனின்றி 4 பேர் செத்தனர்.
அனுப் மராண்டியை குறி வைத்து இந்த தாக்குதலை நக்சலைட்டுக்கள் நடத்தி இருப்பதாக போலீஸ் ஐ.ஜி. பி.பி. பரதன் தெரிவித்தார். தாக்கு தலில் ஈடுபட்ட 30 நக்சலைட்டுகளும் தப்பி ஓடி விட்டனர். அவர்களைப் பிடிக்க சுமார் 500 பேர் கொண்ட மத்திய போலீஸ் படை தேடுதல் வேட்டை நடத்தி வருகிறது.
அனுப் நடத்திய கலை நிகழ்ச்சிக்கு போலீஸ் பாது காப்பு கொடுக் கப்பட்டிருந்தது. என்றாலும் நக்சலைட்டுகள் திட்டமிட்டு போலீஸ் உடையில் பொதுமக்களுடன் கலந்து ஊடுருவி தாக்குதல் நடத்தி இருப்பதாக உயர் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
கலைநிகழ்ச்சி நடந்த பகுதியில் தியோரி போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் வீரேந்திர சிங் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கால்பந்து போட்டி பரிசளிப்பு விழா முடிந்ததும் அவர் புறப்பட்டு சென்று விட்டார். பாதுகாப்பில் அசட்டையாக இருந்ததற்காக அவர் மீது நடவடிக்கை எடுக்க உயர் அதிகாரிகள் தீர்மானித்துள் ளனர்.
சம்பவ இடத்துக்கு ஜார்க்கண்ட் முதல்-மந்திரி மதுகோடா விரைந்துள்ளார். அவர் பாபுலால் மராண்டியை போனில் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினார். ஜார்க்கண்ட் முக்தி மோர்சா தலைவர் சிபுசோரனும் பாபுலால் மராண்டிக்கு ஆறுதல் கூறினார்.
கடந்த மார்ச் மாதம் இதே போன்ற கால்பந்து போட்டி விழாவில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா எம்.பி. சுனில் மகோடாவை நக்சலைட்டுகள் சுட்டுக் கொன்றனர்.
தாக்குதல் குறித்து பாபுலால் மராண்டி நிருபர்களிடம் கூறியதாவது:- நக்சலைட்டுகள் என் குடும்பத்தை குறி வைத்து தாக்குகிறார்கள். என் மகனும் தம்பியும் இரவில் வெளியில் போய் இருக்கக்கூடாது. எப்படி யோ என் தம்பி உயிர் தப்பி விட்டான். எனக்கு கிடைத்த தகவல்படி நக்சலைட் தீவிரவாதிகள் சி.ஆர்.பி.எப். போலீஸ் உடை அணிந்து வந்து தாக்குதல் நடத்தி இருப்பதாக தெரி கிறது. நக்சலைட்டுக்களை ஒடுக்க மத்திய-மாநில அரசு கள் இதுவரை உருப்படியாக எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் எல்லா மாவட்டங்களிலும் நக்சலைட்டுகள் வெறியாட்டம் உள்ளது. இந்தியா முழுவதும் 156 மாவட்டங்களில் நக்சலைட்டு கள் பரவி உள்ளனர். இவ்வாறு பாபுலால் மராண்டி கூறினார்.
17 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரி விக்கும் வகையில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) முழு அடைப்பு நடத்தப்படும் என்று ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா (ஜனநாயகம்) கட்சி அறிவித்துள்ளது. இவ்வாறு பாபுலால் மராண்டி கூறினார்.