மயிலாடுதுறையில் மோதலை தடுக்க முயன்ற கல்லூரி மாணவர் கத்தியால் குத்திக் கொலை!!

Read Time:2 Minute, 25 Second

6c8f56aa-32b7-478d-b577-f97af86db0c3_S_secvpfநாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள மேல மாப்படுகையைச் சேர்ந்த ராமமூர்த்தி என்பவர் மகன் செல்வகுமார் (வயது22). இவர் தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இவர் மேல மாப்படுகையில் பாஸ்கர் என்பவரின் காய்கறி கடையில் பகுதி நேர ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

பாஸ்கருக்கும் அதேபகுதியைச் சேர்ந்த மோகன் (42) என்பவருக்கும் முன் விரோதம் இருந்து வந்தது. இதைதொடர்ந்து நேற்று இரவு பாஸ்கரின் காய்கறி கடைக்கு மோகன் வந்தார். அவர் தன்மீது மோட்டார் திருடியதாக வீண்பழி சுமத்தியதாக கூறி பாஸ்கரிடம் தகராறு செய்தார். அப்போது ஒருவரை ஒருவர் தாக்கினர்.

இதனை கண்ட செல்வகுமார் மோதலை தடுக்க முயன்றார். அப்போது மோகன் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து செல்வகுமாரை சரமாரியாக குத்தினார். மேலும் பாஸ்கரின் சகோதரர் குணசேகரன், அவரது மனைவி உமாமகேஷ்வரி ஆகியோரையும் கத்தியால் குத்திவிட்டு மோகன் தப்பி சென்று விட்டார்.

இதில் படுகாயம் அடைந்த 3 பேரையும் மீட்டு மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே செல்வகுமார் பாதாபமாக இறந்தார். குணசேகரனும் உமாமகேஷ்வரியும் முதலுதவி சிகிச்சைக்குப்பின் திருவாரூர் மருத்துவக்கல்லுரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இது தொடர்பாக மயிலாடுதுறை இன்ஸ்பெக்டர் செல்வம் வழக்குப்பதிவு செய்து செல்வகுமாரை கொலை செய்த மோகனை கைது செய்தார். இந்த சம்பவம் கல்லூரி மாணவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post குஜராத் வெள்ளத்திற்கு மேலும் 4 ஆசிய இன சிங்கங்கள் பலி: பலி எண்ணிக்கை 9 ஆக உயர்வு!!
Next post நெல்லையில் பெட்ரோல் பங்கில் கொள்ளையடித்த வாலிபர் கைது!!