குஜராத் வெள்ளத்திற்கு மேலும் 4 ஆசிய இன சிங்கங்கள் பலி: பலி எண்ணிக்கை 9 ஆக உயர்வு!!

Read Time:2 Minute, 9 Second

61d5af62-a469-4a76-a3c5-a751172b64c2_S_secvpfகுஜராத் மாநிலத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிமேலும் 4 ஆசிய இன சிங்கங்கள் இறந்துவிட்டதாக அதிர்ச்சி தரும் செய்தி வெளியாகியுள்ளது.

முன்னதாக, வெள்ளத்தால் அதிகம் பாதிக்கபட்ட அம்ரேலி மாவட்டத்தில் மூன்று மாத பெண் சிங்க குட்டி,ஒரு பெண் சிங்கம் உட்பட மொத்தமாக 3 சிங்கங்கள் பிணமாக மீட்கப்பட்டது. மழை வெள்ளத்தால் கிர் காட்டுப்பகுதியில் உள்ள ஆசிய சிங்கங்கள் காப்பகத்தில் இருந்து தப்பி வந்த சுமார் 50 சிங்கங்கள் அம்ரேலி மாவட்டத்தில் காடுகளை ஒட்டியுள்ள 25-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்குள் ஊடுருவியுள்ளதாக கருதப்படுகின்றது.

இதேபோல் பாவ்நகர் மாவட்டத்தில் இரண்டு சிங்கங்கள் வெள்ளத்தில் சிக்கி இறந்துவிட்டதாக தெரியவந்தது. சிங்கங்களின் உடல்கள் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுதவிர, தற்போது அம்ரேலி மாவட்டத்திலிருந்து மேலும், 4 சிங்கங்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. இதனால், இதுவரை பலியான ஆசிய இன சிங்கங்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.

காட்டுப்பகுதிகளிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் பல விலங்குகள் வெள்ளத்தில் நீந்தியபடி அருகாமையில் உள்ள கிராமப்புறங்களுக்கு வந்து சேர்ந்துள்ளன. அவற்றை தேடி மீட்கும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆக்ராவில் பொது இடத்தில் சிறுநீர் கழித்த 109 பேர் கைது!!
Next post மயிலாடுதுறையில் மோதலை தடுக்க முயன்ற கல்லூரி மாணவர் கத்தியால் குத்திக் கொலை!!