நடிகர் சங்க தேர்தலுக்கு சிக்கலுக்கு மேல் சிக்கல்..!!

Read Time:1 Minute, 31 Second

vishal1சென்னை தி.நகரில் உள்ள நடிகர் சங்க வளாகத்தில் புதிய கட்டிடம் கட்டுவது தொடர்பாக சங்கத் தலைவர் சரத்குமார் தரப்புக்கும், நடிகர் விஷால் தரப்புக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவுகிறது. இந்த பிரச்சினைக்கு மத்தியில் தேர்தலை நடத்த நடிகர் சங்கம் ஏற்பாடு செய்தது.

வரும் 15 ஆம் திகதி தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கான தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த தேர்தலை வேறு திகதிக்கு மாற்ற வேண்டும் என்றும், தேர்தல் நடைபெறும் இடத்தை மாற்ற வேண்டும் என்றும் விஷால் தரப்பினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதேபோல் தேர்தலுக்கு தடை விதிக்கக்கோரி பூச்சி முருகன் தனியாக வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், நேற்று தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தீர்ப்பை ஒத்திவைத்த நீதிமன்றம், இன்று நடைபெற உள்ள வேட்பு மனு தாக்கலுக்கும் தடை விதிக்க மறுத்துவிட்டது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நடிகையின் மர்மச்சாவு – சி.பி.ஐ. மீண்டும் விசாரணை!!
Next post DD க்கு என்ன நடந்தது…? வௌிவரும் உண்மைகள்…!!