நடிகையின் மர்மச்சாவு – சி.பி.ஐ. மீண்டும் விசாரணை!!

Read Time:2 Minute, 26 Second

jiah-khanமும்பையில் மர்மமான முறையில் நடிகை ஜியா கான் இறந்து கிடந்தது தொடர்பான வழக்கில் நடிகர் ஆதித்யா பஞ்சோலியின் மகன் சூரஜ் பஞ்சோலியிடம் சி.பி.ஐ. மீண்டும் விசாரணை நடத்த உள்ளது.

நடிகை ஜியா கான் மும்பை ஜூகு பகுதியில் உள்ள தனது வீட்டில் கடந்த 2013ம் ஆண்டு ஜூன் 3-ம் திகதி மின்விசிறியில் பிணமாக தொங்கினார். அவர் நடிகர் சூரஜ் பஞ்சோலியை காதலித்ததாகவும் அந்த உறவு முறிந்ததால் ஏற்பட்ட விரக்தியில் தற்கொலை செய்துகொண்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக போலீசார் சூரஜ் பஞ்சோலியை கைது செய்து விசாரணை நடத்தினர். பின்னர் ஐகோர்ட் உத்தரவின்படி இவ்வழக்கு கடந்த ஆண்டு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது.

ஜியா கான் தற்கொலை செய்தாரா? அல்லது கொலை செய்யப்பட்டு தூக்கில் போடப்பட்டாரா? என்ற கோணத்தில் விசாரணையை தொடங்கிய சி.பி.ஐ. அதிகாரிகள், சூரஜ் பஞ்சோலியிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அவரது தந்தை ஆதித்யா பஞ்சோலியிடமும் கடந்த மாதம் 13-ம் திகதி விசாரணை நடத்தினர். அவரது வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது.

தேவைப்பட்டால் சூரஜ் பஞ்சோலி மீண்டும் விசாரணைக்கு அழைக்கப்படலாம் என்று சி.பி.ஐ. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஜியா கான் மரணத்தில் குற்றச்சதி பின்புலமாக இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜியா கான் தற்கொலை செய்யவில்லை என்றும், தற்கொலைக்கு முன் அவர் எழுதிய கடிதத்தில் சூரஜ் பஞ்சோலியை மறைமுகமாக குறிப்பிட்டிருப்பதால் அவரிடம் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஜியா கானின் தாயார் கூறியது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உங்கள் செல்பிகளை கோப்பியாக இனி பருகலாம் (VIDEO)!!
Next post நடிகர் சங்க தேர்தலுக்கு சிக்கலுக்கு மேல் சிக்கல்..!!