6 வயது சிறுமியை கட்டாய திருமணம் செய்த பஞ்சாயத்து தலைவர்: ராஜஸ்தானில் காட்டுமிராண்டித்தனம்!!

Read Time:1 Minute, 20 Second

cb824be2-67fd-4625-bde2-e46048fae5fe_S_secvpfராஜஸ்தான் மாநிலத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியான கிராமப் பஞ்சாயத்து தலைவர் 6 வயது பெண்ணை கட்டாய திருமணம் செய்து கொண்ட தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

இங்குள்ள சித்தோர்கர் மாவட்டத்தில் உள்ள கங்ரார் கிராமத்தை சேர்ந்த வார்டு பஞ்சாயத்து தலைவரான ரட்டன் ஜாட் என்பவர் சுமார் ஆறு வயது மதிக்கத்தக்க சிறுமியை கடந்த வாரம் திருமணம் செய்துகொண்ட வீடியோ காட்சிகள் நாடு முழுவதும் நேற்று ‘வாட்ஸ்அப்’ மூலம் தகவலாக பரவியது.

இதையடுத்து, மாவட்ட கலெக்டர் வேதபிரகாஷ் மற்றும் போலீஸ் சூப்பிரண்ட் பிரசன்ன குமார் காமேசரா ஆகியோர் இன்று அந்த கிராமத்துக்கு வந்து அங்குள்ளவர்களிடம் விசாரித்தனர். இந்த விசாரணையில் திருமணம் நடந்தது உண்மைதான் என்பது தெரியவந்தது. இதையடுத்து, தலைமறைவாக இருக்கும் ரட்டன் ஜாட்டை போலீசார் தேடி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உயர் இரத்த அழுத்தத்தை எதிர்த்துப் போராடும் சிறப்பான உணவுகள்..!!
Next post ஆந்திராவில் செம்மரக் கடத்தலில் தொடர்புடைய 7 வன ஊழியர்கள் கைது!!