செக்ஸ்’ ஆசைக்கு இணங்க மறுத்த பெண்ணை குடும்பத்தோடு எரிக்க முயற்சி வீட்டுக்குள் குதித்து தீக்குளித்த வாலிபர் கருகி சாவு

Read Time:3 Minute, 3 Second

ani_kiss.gifசெக்ஸ்’ ஆசைக்கு இணங்க மறுத்த பெண்ணை எரித்து கொல்ல முயன்ற வாலிபர் தீயில் கருகி பலியானார். தவறாக நடக்க முயற்சி பொன்னேரி அருகே உள்ள சிறுபாக்கம் பகுதியில் வசித்து வருபவர் வேலாயுதம். இவர் லாரியில் மூட்டை தூக்கும் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ருக்கு(வயது30). இவர்களுக்கு சந்துரு(2) என்ற மகனும் சவுந்தரி(8) என்ற மகளும் உள்ளனர். இதே பகுதியில் வசிப்பவர் ஏழுமலை(26). இவரும் கூலி வேலை பார்த்து வருகிறார். ருக்குவிடம் ஏழுமலை தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் ஏழுமலையின் பெற்றோரிடமும், ஊர் பெரியவர்களிடமும் ருக்கு போலீசில் புகார் செய்யப்போவதாக கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ஏழுமலை நள்ளிரவில் ருக்குவின் கூரை வீட்டின் மீது மண் எண்ணையை ஊற்றிவிட்டு தனது உடலிலும் மண் எண்ணையை தெளித்துக்கொண்டு ருக்குவின் வீட்டு கூரை மீது ஏறி வீட்டின் உள்ளே குதித்து தனது உடலில் தீவைத்துக்கொண்டதாக கூறப்படுகிறது. அப்போது ருக்குவும் அவரது குழந்தைகளும் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தனர். சத்தம் கேட்டு எழுந்த ருக்கு ஏழுமலை உடல் முழுவதும் எரிந்த நிலையில் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

தன்னையும் குழந்தைகளையும் காப்பாற்றிக்கொள்ள தனது மகள் சவுந்தர்யாவை தூக்கி வெளியே வீசினார். இதில் அதிர்ஷ்ட வசமாக சவுந்தர்யாவுக்கு எந்தவித காயமும் ஏற்படவில்லை.

பின்னர் தனது மகன் சந்துருவை தூக்கிக்கொண்டு ருக்கு எரியும் வீட்டில் இருந்து தப்பி வெளியே ஓடிவந்தார். ஏழுமலை உடல்முழுவதும் கருகி அதே இடத்தில் பலியானார்.

சிறுவன் உயிர் ஊசல்

முகம், கை, கால்களில் படுகாயத்துடன் கிடந்த தாய், மகனை அருகில் இருந்தவர்கள் சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் கொண்டுபோய் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதில் சிறுவன் சந்துரு மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளான்.

இதுபற்றி பொன்னேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சத்யபாமா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post வரதட்சணை கேட்டு திருமணத்தை நிறுத்திய மூவருக்கு ஓராண்டு தண்டனை ஒரு நாளானது
Next post கலிபோர்னியாவில் காட்டுத்தீயினால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி விஜயம்