தபாலில் வந்ததை உரிமையாளரிடம் ஒப்படைக்காமல் கிரெடிட் கார்டுகளை திருடி நூதன முறையில் பல லட்சம் மோசடி கூரியர் நிறுவன ஊழியர் உள்பட 5 பேர் சிக்கினர்
கொரியர் மூலம் அனுப்பப்பட்ட கிரெடிட் கார்டை உரிமையாளர்களிடம் ஒப்படைக்காமல், நூதன முறையில் பல லட்சம் ரூபாய் மோசடி செய்த கூரியர் நிறுவன ஊழியர் தலைமையிலான கும்பலை போலீசார் பிடித்துள்ளனர்.22 கார்டுகள் அபேஸ் சென்னை சைதாப்பேட்டை கொத்தவால்சாவடி ரோடை சேர்ந்தவர் கணேஷ் (20). இவர், தி.நகரில் உள்ள `எல்பி’ என்ற கூரியர் நிறுவனத்தில் டெலிவரி பாயாக சில மாதங்களுக்கு முன்பு வேலைக்குச் சேர்ந்தான். வேலைக்கு சேரும்போது பரத் என்ற போலி பெயர் கொடுத்தான் கணேஷ். இந்தநிலையில் கடந்த 22.9.2007-ல், பல்வேறு நிறுவனங்களின் 22 கிரெடிட் கார்டுகளை விண்ணப்பதாரர்களுக்கு டெலிவரி செய்வதற்காக கணேஷிடம் கூரியர் நிறுவனத்தினர் கொடுத்தனர். அவற்றை உரிமையாளர்களிடம் கணேஷ் ஒப்படைக்கவில்லை. ஆனால், உரிமையாளர்களிடம் கொடுத்துவிட்டதுபோல் அவன் போலி கையெழுத்து போட்டு நிறுவனத்திடம் கொடுத்துவிட்டான்.
அதுமட்டுமின்றி, அன்றைய தினமே வேலையை ராஜினாமாவும் செய்து விட்டான். இதைத் தொடர்ந்து, தனது நண்பர்கள் துணை கொண்டு அந்த கிரெடிட் கார்டுகள் மூலம் பல்வேறு கடைகளில் பொருட்களை அவன் வாங்கியுள்ளான். ஆனால், அதற்கான ரசீதோ, கிரெடிட் கார்டு கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு அனுப்பப்பட்டன. கிரெடிட் கார்டே கைக்கு கிடைக்காத நிலையில், ரசீது வந்திருப்பதைப் பார்த்து அதிர்ந்த அவர்கள், வங்கியில் புகார் செய்தனர்.
காட்டி கொடுத்த முகவரி
இதைத் தொடர்ந்து கூரியர் நிறுவனத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள், கமிஷனர் நாஞ்சில் குமரனிடம் புகார் செய்தார்கள். அவரது உத்தரவின் பேரில், துணை கமிஷனர் தர்மராஜ் மேற்பார்வையில், உதவி கமிஷனர் பன்னீர்செல்வம் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் மேரிஜு விசாரணை மேற்கொண்டார். இதில், போலி பெயரில் கணேஷ் பணிக்கு சேர்ந்தது தெரியவந்தது. ஆனால், அவன் கொடுத்த ஒரு தொலைபேசி எண் மற்றும் ஒரு நண்பரின் தவறான முகவரியின் ஒரு பகுதி போன்றவற்றின் மூலமாகவும் அவனது நண்பன் அலெக்சாண்டர் சிக்கினான்.
அலெக்சாண்டரின் புகைப்படம் ஒட்டப்பட்ட டிரைவிங் லைசென்சையே கணேஷ் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. அலெக்சாண்டர் (21) மூலமாக கணேஷையும், அவனது கூட்டாளிகள் கார்த்திகேயன் (20), கோவிந்தராஜ் (30) மற்றும் வீரபத்திரன் (20) ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ஒரு கலர் டி.வி, 5 பவுன் தங்கநகைகள் மற்றும் 2 செல்போன்கள் உள்ளிட்ட ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். நூதன முறையில் மோசடி செய்த இந்த கும்பலை போலீசார் சிறையில் அடைத்தனர்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...