கோபி, அப்பன் மற்றும் தேவிகனை கொன்ற, தமிழ் பாரளுமன்ற உறுப்பினர் யார்?
கோபி, அப்பன் மற்றும் தேவிகனை கொன்ற தமிழ் பாரளுமன்ற உறுப்பினர் யார்?
தம்பியை விற்றுப் பிழைக்கும் தம்பியின் வாரிசின் திருகுதாளங்கள் -1
உண்மைகள் தொரியாததால் மக்கள் சிலரை அன்னார்ந்து பார்க்கின்றனர் ஆனால் அப்படி அன்னார்ந்து பார்க்கப்படும் சிலரோ மிகக் கேவலமானவர்களாவும் தங்களின் சுயநலத்திற்காக எத்தகைய பாதகச் செயலையும் செய்யத் தயங்காதவர்களாகவும் இருக்கின்றனர் என்பதுதான் வருத்தமளிக்கும் உண்மை.
இன்று மக்களால் துனிச்சலான ஆள் என்று அழைக்கப்படும் ஒரு பாராளுமன்ற உறுப்பினரின் அந்தரங்கமோ மிகவும் கேவலமானதாக இருக்கிறது. இறுதிவரை களத்தில் போராடி மரணித்த தேசியத் தலைவர் திரு.பிரபாகரன் அவர்களை தன்னுடைய தலைவன், விடுதலைப் புலிகள் இல்லாத இடைவெளியை நிரப்புவதற்காகத் தான், நான் அரசியலில் ஈடுபடுகின்றேன் என்றெல்லாம் மேடை மேடையாக பேசிவரும் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் திரைமறைவில் விடுதலைப் புலிகளின் தியாகத்தை விற்றுப் பிழைக்கும் கேவலமான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றார்.
இவர் எப்படிப்பட்டவர் என்பதை தெரிந்து கொள்வதற்காக இந்தத் தகவலை கவனியுங்கள். இதுவரை வெளியில் வராத இந்தத் தகவலை மக்களின் நன்மை கருதியே வெளியிடுகின்றோம்…
கடந்த ஆண்டு ஏப்பிரல் மாதம் விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீளமைக்க முயன்றார்கள் என்னும் பெயரில் கோபி, அப்பன் மற்றும் தேவிகன் எனப்படும் இளைஞர்கள் இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டதான செய்தி ஒன்றை நீங்கள் படித்திருப்பீர்கள்;. இவர்களது உடல் கூட எவருக்கும் காட்டப்படவில்லை.
என்ன நடந்தது? உண்மையிலேயே எங்கட பொடியங்கள் மீண்டும் களம் புகுந்தவையளோ?.. இப்படியெல்லாம் எங்கள் மக்கள் பேசிக் கொண்டனர். ஆனால் அந்த விடயம் இருட்டோடு இருட்டாக புதைக்கப்பட்டு விட்டது. அந்த பாராளுமன்ற உறுப்பினர் திட்டமிட்டு புதைத்து விட்டார்.
இன்று என்னுடைய தேசியத் தலைவன் பிரபாகரன் என்று சொல்லித் திரியும் அந்த பாராளுமன்ற உறுப்பினர் தான் இவர்கள் மூவரதும் கொலைக்கு காரணம் என்றால் நம்புவீர்களா?
சும்மா இருந்த மூன்று பேரையும் உசுப்பிவிட்டு, இறுதியில் தனக்கு ஆபத்து என்றவுடன் அவர்களை இராணுவத்தினரிடம் காட்டிக் கொடுத்து, தன்னை பாதுகாத்துக் கொண்ட நல்லவர் தான், இன்று தன்னை தலைவரின்; வாரிசு நான்தான் என்று சொல்லித் திரியும் அந்த துணிச்சலான பாராளுமன்ற உறுப்பினர்.
சம்பவதினம் என்ன நடந்தது…?
அந்த இளைஞர்களின் செயற்பாடுகளுக்கு பின்னால் இந்த கிளிநொச்சி வீரன் தான் இருக்கிறார் என்பதை புலனாய்வாளர்கள் மோப்பம் பிடித்து விட்டனர். அவர்கள் இந்த தலைவரின் விசுவாசி எனக் கூறிக் கொள்பவரை அணுகி ஆதாரங்களை காண்பிக்க வெலவெலுத்துப் போன கிளிநொச்சி வீரன் அவர்களை காட்டித் தருகிறேன் எண்டு காலில் விழுந்து விட்டார்.
சம்பவ தினம் அவர்களை கதைக்க வேண்டுமென்று கூறி ஒரு இரகசியமான இடத்திற்கு அழைத்திருக்கிறார். அங்கு தயராக இருந்த இராணுவம் அவர்களை கைது செய்ய முற்பட்டபோது இடம்பெற்ற தாக்குதலில் மூவரும் கொல்லப்பட்டனர்.
பின்னர் கிளிநொச்சி வீரன் வழமைபோல் தன்னுடைய தேசியத்தலைவர் வியாபாரத்தை ஸ்ரீலங்கா ராணுவத்தின் மறைமுக அனுசரணையுடன் சிறப்பாக செய்து வருகின்றார். அடுத்த தேர்தலில் கிளிநொச்சி வாக்குகள் அவ்வளவும் தனக்குத்தான் என்று எக்காளமிட்டபடி பகற்கனவுடன் திரிகிறார்.
-உண்மை விளம்பி- (மின்னஞ்சல் மூலம் கிடைக்கப் பெற்றது)
Average Rating