ஓமலூர் அருகே நர்சை கடத்தி சென்று கற்பழிக்க முயற்சி: வாலிபர் கைது!!

Read Time:2 Minute, 45 Second

41bcff20-cd0f-4c04-a946-0f923b80f625_S_secvpfசேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த பொட்டிபுரம் காலனி பகுதியை சேர்ந்தவர் சின்னதம்பி. இவரது மனைவி ஈஸ்வரி (வயது 26). இவர் ஓமலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக பணியாற்றி வருகிறார்.

நேற்று இவருக்கு இரவு பணி இருந்தது. இதனால் பஸ்சில் செல்ல பொட்டிபுரம் காலனி பஸ் ஸ்டாப்பில் காத்து இருந்தார். அப்போது இவரது மாமியாரின் தம்பி மகன் மோட்டார் சைக்கிளில் வந்தார். அவர் ஈஸ்வரியை பார்த்து பேசி, தான் சேலம் செல்ல இருப்பதாகவும், வழியில் ஆஸ்பத்திரியில் இறக்கிவிட்டு செல்வதாகவும் கூறினார். அவரது பேச்சை நம்பி அவரது மோட்டார் சைக்கிளில் ஈஸ்வரி ஏறிச்சென்றார்.

ஆனால் அந்த உறவுக்கார வாலிபர் மோட்டார் சைக்கிளை தனியார் ஆஸ்பத்திரிக்கு ஓட்டிச் செல்லாமல் ஓமலூர் பைபாஸ் பகுதியில் உள்ள தனியார் பருப்பு மில் வழியாக அடைக்கலூரில் உள்ள பூலாவாரி ஏரிக்கரைக்கு ஓட்டிச்சென்றார். அங்கு அந்த வாலிபர் ஈஸ்வரியின் ஜாக்கெட்டை கிழித்து கற்பழிக்க முயன்றார். அவரது பிடியில் இருந்து தப்பிக்க ஈஸ்வரி முயன்ற போது அவரது இடது கையை கடித்து விட்டார். இதனால் ஈஸவரி அலறியனார்.

அவரது சத்தத்தை கேட்டு பொது மக்கள் அங்கு ஓடி வந்தனர். அந்த வாலிபர் தான் வந்த மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பி சென்றுவிட்டார். பின்னர் இது குறித்து தனது கணவரை போனில் தொடர்பு கொண்டு நடந்த விவரங்களை தெரிவித்தார். அதன் பிறகு ஓமலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்ந்து சிகிச்சை பெற்றார். இந்த சம்பவம் குறித்து ஓமலூர் போலீசில் புகார் செய்யப்பட்டது.

போலீசார் வழக்கு பதிவு செய்து நர்சை கற்பழிக்க முயன்ற அவரது உறவுக்கார வாலிபரை கைது செய்தனர். கைதான வாலிபரின் பெயர் பாஸ்கர் (35). சேலம் பச்சப்பட்டி பகுதியைச் சேர்ந்த வீரப்பன் என்பவரின் மகன். கைதான வாலிபரிடம் ஓமலூர் போலீசார் தொடந்து விசாரரணை நடத்தி வருகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ராமநாதபுரத்தில் ஜெயில் முன் அமர்ந்து இளம்பெண் உண்ணாவிரதம்!!
Next post இசையமைப்பாளர் விமான விபத்தில் மரணம்!!