ஈரோடு எஸ்.பி.அலுவலகத்தில் காதலனுடன் பட்டதாரி பெண் தஞ்சம்!!

Read Time:2 Minute, 31 Second

0a4f9180-ce95-4c2d-9bc4-68c0f5f65624_S_secvpfசேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியை சேர்ந்தவர் இளவரசன் (வயது 27). டிப்ளமோ படித்த இவர் அப்பகுதியில் செல்போன் கடை நடத்தி வருகிறார்.

இதே பகுதியை சேர்ந்தவர் சோமசுந்தரம். இவரது மகள் மனோத் பிரியா (23). எம்.ஏ. படித்து உள்ளார்.

சோமசுந்தரத்துக்கு சொந்தமான கடையில் தான் வாடகைக்கு இளவரசன் இருந்து வந்தார்.

இந்த நிலையில் இளவரசனுக்கும், மனோத் பிரியாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மலர்ந்தது. இந்த காதல் 1 ஆண்டுக்கும் மேலாக இருந்து வந்து.

இதற்கிடையே இவர்களது காதல் விவகாரம் இருவரது பெற்றோர்களுக்கும் தெரிய வந்தது. இதனால் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இதனால் அதிர்ச்சி அடைந்த காதல் ஜோடியினர், பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்ய முடிவு செய்தனர். அதன்படி இருவரும் திருமணம் செய்து கொண்டு பள்ளிபாளையம் சார்பதிவாளர் அலுவலகத்தில் திருமணத்தை பதிவு செய்தனர்.

பின்னர் ஈரோட்டில் வந்த காதல் ஜோடியினர், அங்குள்ள நண்பர்கள் வீட்டில் தங்கி இருந்து வந்தனர்.

இந்த நிலையில் இன்று ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவகத்திற்கு காதல் ஜோடி வந்தனர்.

அங்கு போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்கர வர்த்தியை நேரில் இளவரசனும், மனோத் பிரியாவும் சந்தித்தனர்.

அப்போது தாங்கள் பெற்றோர் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்து கொண்டதாகவும், தங்களுக்கு பாதுகாப்பு வழங்கும்படியும் கேட்டுக்கொண்டனர்.

இதை தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு சிபி சக்கரவர்த்தி, காதல் ஜோடியிடம் விசாரணை நடத்தினார். மேலும் இதுகுறித்து மகளிர் போலீசார் விசாரணை நடத்த எஸ்.பி. உத்தரவிட்டார்.

பட்டதாரி பெண் காதலனுடன் எஸ்.பி. அலுவலகத்தில் தஞ்சம் அடைந்த சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அறந்தாங்கி அருகே பரவச திருவிழா: எருமை மாட்டை பலியிட்டு ரத்தம் குடித்த நரிக்குறவர்கள்!!
Next post செங்கல்பட்டு சீர்திருத்த பள்ளியில் இருந்து தப்பி ரவுடியிடம் தஞ்சம்: 2 பேரை கைது செய்த போலீசார்!!