மும்பையில் விஷச்சாராயத்துக்கு பலி 105 ஆனது: மேலும் 41 பேருக்கு தீவிர சிகிச்சை!!

Read Time:1 Minute, 32 Second

da7b604b-30c7-4700-a186-39ac43d732b9_S_secvpfமும்பை மால்வாணியில் கடந்த 17-ந் தேதி சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்ட சாராயத்தை அந்த பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளிகள் குடித்தனர். விஷத்தன்மை கொண்டிருந்த அந்த சாராயத்தை அந்த பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் வாங்கி குடித்துள்ளனர்.

இதனால் வாந்தி, மயக்கம், வயிற்று வலி ஏற்பட்டு சுருண்டு விழுந்தனர். பாதிக்கப்பட்ட அனைவரும் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.

ஆனால் சிகிச்சை பலனின்றி மறுநாளே 13 பேர் இறந்துபோனார்கள். 19-ந் தேதி சாவு எண்ணிக்கை 55 ஆக உயர்ந்தது. நேற்று முன்தினம் மேலும் 35 பேரை விஷச்சாராயம் பலி கொண்டு விட்டது. இதனால் மூன்று நாளில் பலியானோர் எண்ணிக்கை 90 ஆனது.

இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் நேற்றும் பலர் சிகிச்சை பலனின்றி பலியானார்கள். இதன் மூலம் விஷச்சாராயத்திற்கு பலியானவர்களின் எண்ணிக்கை 105 ஆக அதிகரித்து உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post விதவையை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த கொடூரர்கள்!!
Next post அறந்தாங்கி அருகே பரவச திருவிழா: எருமை மாட்டை பலியிட்டு ரத்தம் குடித்த நரிக்குறவர்கள்!!