ஊருக்குள் புகுந்த சிறுத்தையின் கால்கள், வாலை வெட்டி மரத்தில் தொங்கவிட்ட கிராமவாசிகள்!!

Read Time:2 Minute, 1 Second

393e7c0c-eab7-4fed-8539-b91b72f3a07e_S_secvpfஉத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள புருலியா மாவட்டத்தின் கோட்ஷிலா பகுதி அருகேயுள்ள டட்டுவாரா கிராமத்துக்குள் சில நாட்களுக்கு முன்னர் புகுந்த ஒரு பெண் சிறுத்தை அந்த கிராமத்தை சேர்ந்த ஒரு பெண்ணை தாக்கிக் கொன்றுவிட்டு கொலை வெறியுடன் அலைந்து கொண்டிருப்பதாக கடந்த சனிக்கிழமை வதந்திகள் பரவின.

இதையடுத்து, அந்த கிராமம் முழுவதும் தேடுதல் வேட்டை நடத்திய மக்கள் இறுதியாக ஒரு குடிசையின் பின்புறத்தில் உள்ள கொட்டகைக்குள் பதுங்கியிருந்த அந்த சிறுத்தையை கண்டுபிடித்தனர். அந்த சிறுத்தையை விரட்டிச் சென்ற நூற்றுக்கணக்கான கிராமவாசிகள் கூரிய ஆயுதங்களை வீசி அதைக் கொன்றனர்.

அதிலும் ஆவேசம் தணியாத அவர்கள் சிறுத்தையின் நான்கு கணுக்கால்களை வெட்டி தூர எறிந்தனர். மேலும், வாலையும் துண்டித்து அப்பகுதியில் உள்ள பெரிய மரத்தில் அதன் பிரேதத்தை தொங்கவிட்டு வேடிக்கை பார்த்து, ரசித்தனர்.

இந்த கொடூர சம்பவம் வனவிலங்கு ஆர்வலர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஊருக்குள் சிறுத்தையின் நடமாட்டம் இருப்பதைப் பற்றி அப்பகுதி வனத்துறை அலுவலர்களுக்கு தகவல் அளிக்காமல் இந்த கொடூரத்தை நிகழ்த்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 1 மில்லியன் பார்வையிட்ட ‘புலி’ (OFFICIAL TEASER)!!
Next post வரதட்சணை கொடுமையின் உச்சகட்டம்: மருமகளுக்கு ஆசிட் கொடுத்து கொன்ற மாமியார் உள்பட 8 பேருக்கு வலைவீச்சு!!