மலையாளத்தில் மொழிபெயர்க்கப்படும் கமல்ஹாசன் திரைக்கதைகள்

Read Time:1 Minute, 1 Second

கமல்ஹாசன் இரு திரைக்கதைகளை மலையாளத்தில் மொழி பெயர்த்திருக்கிறார்கள். தமிழ்சினிமா வரலாற்றிலேயே ஒரு தமிழ்படத்தின் திரைக்கதை மலையாளத்தில் மொழி பெயர்க்கப்படுவது இதுவே முதல்முறை. இம்மாதம் 28-ந் தேதி திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள சந்திரசேகர நாயர் ஸ்டேடியத்தில் நடைபெறும் புத்தக கண்காட்சியில் இந்த புத்தகங்கள் வெளியிடப்படுகின்றன. கமல்ஹாசன் திரைக்கதை எழுதிய படங்கள் மகாநதி, ஹேராம். இவ்விரு படங்களின் திரைக்கதையை மலையாளத்தில் மொழி பெயர்த்திருக்கிறார் கே.எஸ்.விஸ்வநாதன். “கமல்ஹாசண்ட இரண்டு திரைக்கதகள்” என்ற பெயரில் இந்த திரைக்கதைகள் தொகுக்கப்பட்டுள்ளன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post மியன்மாரில் இராணுவ ஆட்சியாளர்களின் பிரதிநிதி ஆங்-சாங்-சூ கியுடன் முதற்தடவையாக சந்திப்பு
Next post (அ)சிங்கமா? அல்லது ???? ஈபிடிபி டக்ளஸ்! (முன்னைநாள் ஈபிடிபி உறுப்பினரின் ஆக்கம் இது)