ஆந்திரப்பிரதேச மக்களுக்கு உதவும் சிங்கப்பூரின் உலக கழிவறை அமைப்பு!!

Read Time:1 Minute, 54 Second

95ed3ee5-0d11-49cf-8c8d-46956f47dbbc_S_secvpfசிங்கப்பூரை மையமாகக் கொண்ட உலக கழிவறை அமைப்பு ஆந்திர பிரதேச மக்களுக்கான கழிவறை கட்டும் திட்டத்திற்காக பெருமளவு நிதியை செலவு செய்யவுள்ளது.

லாப நோக்கற்ற அமைப்பான இந்த உலக கழிவறை அமைப்பு, குறைந்த செலவில் கழிவறை கட்டும் திட்டம், பாதாள சாக்கடை திட்டம், மேலும், கழிவறைகள் குறித்த மக்களின் பிம்பத்தை மாற்றுவது, சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது என்று பல நடவடிக்கைகளை இந்தியாவில் மேற்கொள்ளவுள்ளது.

கடந்த 2011-ம் ஆண்டு இந்த அமைப்பைத் தொடங்கிய ஜேக் சிம், சிங்கப்பூரில் வறுமையான சூழ்நிலையில் வளர்ந்தவர். சிங்கப்பூர் ஆற்றை தூய்மைப்படுத்தியது உட்பட அந்நாட்டின் பல சுகாதார நடவடிக்கைகளை கண்கூடாக பார்த்து இதேபோல் உலகில் உள்ள அனைத்து நாடுகளையும் சுகாதாரமானதாக மாற்றும் லட்சியத்தில், முன்னாள் தொழிலதிபரான இவர் முழுநேர தன்னார்வலராக மாறினார்.

இந்தியாவில் முதல் முறையாக இவரது உலக கழிவறை அமைப்பு, கழிவறை கட்டும் திட்டத்தை தொடங்கவுள்ளது. இந்த திட்டத்தின்படி 2018-ம் ஆண்டிற்குள் 60 லட்சம் வீடுகளுக்கு கழிவறை கட்டுவதற்காக 1.8 பில்லியன் சிங்கப்பூர் டாலர்களை இந்த அமைப்பு ஒதுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 12 வயது சிறுமியை பள்ளிக்குள் சிறை வைத்து பாலியல் பலாத்காரம் செய்த பள்ளி மேலாளர் கைது!!
Next post திருப்பதியில் துப்பாக்கி முனையில் பக்தரை மிரட்டிய போலீஸ்காரர் கைது!!