தலாய் லாமாவின் 80-வது பிறந்த நாள்: தர்மசாலாவில் கோலாகல கொண்டாட்டம்!!

Read Time:1 Minute, 48 Second

8ba2463c-0b01-4b16-b148-e57bb6c3cf6c_S_secvpfதிபெத்தியர்களின் தனி நாடு கோரிக்கைக்காக இந்தியாவில் இருந்தவாறு போராடிவரும் புத்த மதகுரு தலாய் லாமா இமாச்சலப்பிரதேசத்தில் உள்ள தர்மசாலாவில் இன்று தனது 80-வது பிறந்தநாளை கொண்டாடினார்.

ஆங்கில நாட்காட்டியின் அடிப்படையிலான அவரது பிறந்தநாள் வரும் ஜூலை மாதம் 6-ம் தேதி தான் வருகின்றது, அன்றைய தினம் அவர் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து, அங்கேயே தனது பிறந்தநாளை கொண்டாடவுள்ளார்.

ஆயினும், திபெத்திய நடைமுறைப்படி கடைபிடிக்கப்பட்டுவரும் சந்திர நாட்காட்டியின்படி அவரது பிறந்தநாள் இன்று (21-ம் தேதி) தர்மசாலாவில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான புத்தத் துறவிகள், திபெத்தில் இருந்து வெளியேறி இங்கு தங்கியுள்ள அவரது ஆதரவாளர்கள், மத்திய இணை மந்திரிகள் மகேஷ் சர்மா, கிரென் ரிஜிஜு மற்றும் இமாச்சலப்பிரதேசம் மாநில மந்திரிகள், அரசு அதிகாரிகள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் பேசிய தலாய் லாமா, உலகம் முழுவதும் கருணை மற்றும் சமூக நல்லிணக்கம் தழைத்தோங்கச் செய்ய உழைப்பதற்காக இன்னும் இருபது ஆண்டுகள் உயிர்வாழ விரும்புவதாக குறிப்பிட்டார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஜோலார்பேட்டை ரெயில் கொள்ளையில் மேலும் ஒரு வட மாநில வாலிபர் கைது!!
Next post டெல்லி யோகா முகாமில் பிரதமர் மோடியுடன் செல்பி எடுக்க முயன்ற பெண்ணுக்கு ஏமாற்றம்!!